
ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹண்டலா குழு உரிமை கோரியுள்ளது.
இந்த இணையவழித் தாக்குதலில், ஸ்ட்ரைக்கர் நிறுவனத்தின் சுமார் 2 லட்சம் கணினி அமைப்புகள், சேவையகங்கள் முடக்கப்பட்டதுடன், 50 டெராபைட் (Terabyte) அளவிலான மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் உலகம் முழுவதும் உள்ள ஸ்ட்ரைக்கர் நிறுவனத்தின் கிளைகளில் இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் கணினித் திரைகளில் ஹண்டலா குழுவின் லோகோ தோன்றுவதாகவும், இதனால் அன்றாடப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் தொழில்நுட்பக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான்-அமெரிக்க இடையிலான தற்போதைய பதற்றமான சூழலில், இது மிக முக்கியமான இணையத் தாக்குதலாகக் கருதப்படுகிறது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments