Ticker

6/recent/ticker-posts

தவெகவுடன் கூட்டணி இல்லை; இறுதியான என்.டி.ஏ. தொகுதி பங்கீடு! புதுச்சேரி பொறுப்பாளர் அறிவிப்பு


புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணையவுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜயை சேர்ப்பது குறித்து தனக்கு தெரியாது. விஜயை தாம் சந்தித்து பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பொறுப்பாளருமான மான்சுவிக் மாண்டவியா, நிர்மல் குமார் சுரானா ஆகியோர் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான என். ரங்கசாமி, “பாஜக – என்.ஆர். காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அனைத்தும் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, “புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணியில், 16 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸும், 14 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடும். பாஜக வசம் இருக்கும் 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

news18

 


Post a Comment

0 Comments