Ticker

6/recent/ticker-posts

ஆர்சிபி வெற்றிக்கு... விராட் கோலி இல்லை... அந்த ஒரு பால் தான் காரணம்


ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடந்த 34வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

பிளேயிங் 11 மாற்றம்

டாஸை வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணி பெரிய மாற்றமாக கிளென் பிலிப்ஸ், அசோக் சர்மா ஆகியோருக்கு பதில் ஜேசன் ஹோல்டர், மானவ் சுதார் சேர்க்கப்பட்டனர். ஆர்சிபி அணியில் பில் சால்டுக்கு பதில் ஜேக்கப் பெத்தெல் சேர்க்கப்பட்டார். 

குஜராத்திற்கு நிதான தொடக்கம்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மான் கில் - சாய் சுதர்சன் ஜோடி ஓரளவு அதிரடியை காட்டியது. பவர்பிளேவில் 36 பந்துகளில், சுமார் 30 பந்துகளை சாய் சுதர்சனே எதிர்கொண்டார். பவர்பிளே முடிவில் குஜராத் விக்கெட் இழப்பின்றி 57 ரன்களை எடுத்தது. 

சுப்மான் கில் 24 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என 32 ரன்களை எடுத்து சுப்மான் கில் ஆட்டமிழந்தார். 12.4 ஓவர்களில்தான் சுப்மான் கில் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

சாய் சுதர்சன் சதம் 

நிதானம் காட்டிய சாய் சுதர்சன் 58 பந்துகள் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் என 100 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 25 ரன்களை சேர்த்தார். கடைசியாக வாஷிங்டன் சுந்தர் 19, ஜேசன் ஹோல்டர் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால், 20 ஓவர்களில் 205 ரன்களை எடுத்தது. புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

கோலி - படிக்கல் மிரட்டல் பார்ட்னர்ஷிப்

தொடர்ந்து, 206 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக தொடங்கியது. ஜேக்கப் பெத்தல் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி - படிக்கல் ஜோடி தொடர்ந்து அதிரடி காண்பித்தது. 

திடீரென ஏற்பட்ட அழுத்தம்

இந்த ஜோடி 59 பந்துகளுக்கு 115 ரன்களை சேர்த்தது. படிக்கல் 27 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 55 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த விராட் கோலி அதிரடி காண்பிக்க 44 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் என 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் ஜித்தேஷ் சர்மா 10, பட்டிதர் 8 என ஆட்டமிழக்க ஆர்சிபி மீது அழுத்தம் அதிகரித்தது. குஜராத் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு உருவானது.

ஆட்டத்தை மாற்றிய ஒரே ஒரு பந்து

ஆனால், 17வது ஓவரின் 5வது பந்தை ரபாடா வேகமாக வீச, டிம் டேவிட் எதிர்கொண்டார். அந்த பந்தை அவர் லெக் சைடுக்கு தூக்கி அடிக்க நினைக்க, பந்து வேகமாக வந்து பேட்டின் வெளிமுனையில்பட்டு Third man திசைக்கு பறந்தது. ஆனால், பந்து கேட்ச் ஆகாமல், பந்தின் வேகம் காரணமாக சிக்ஸராக சென்றது.

குர்னால் பாண்டியாவின் பினிஷிங்

இதற்கு பின் ஆர்சிபியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. 18வது ஓவரை இடதுகை ஸ்பின்னர் மானவ் சுதார், இடதுகை பேட்டர் குர்னால் பாண்டியாவுக்கு வீசினார், அந்த ஓவரிலேயே 2 பவுண்டரி, 1 சிக்ஸரை அடித்து ஆட்டத்தை ஏறத்தாழ முடித்துவிட்டார்.

ஆட்டநாயகன் விராட் கோலி 

தொடர்ந்து, 18.5 ஓவரில் 206 ரன்களை அடித்து இலக்கை எட்டியது. இதனால், 8 பந்துகள் மீதம் இருக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்றது. குஜராத் பந்துவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட், முகமது சிராஜ், ஜேசன் ஹோல்டர், மானவ் சுதார் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

புள்ளிப்பட்டியல் அப்டேட்

புள்ளிப்பட்டியில் ஆர்சிபி 7 போட்டிகளில் விளையாடி 5இல் வென்று, 2இல் தோற்று மொத்தம் 10 புள்ளிகளை (+1.101) பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடி 3இல் வென்று, 4இல் தோற்று மொத்தம் 6 புள்ளிகளுடன் (-0.790) 7வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், எஸ்ஆர்ஹெச் அணி 6 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது. சிஎஸ்கே, டெல்லி அணிகள் 6 புள்ளிகளுடன் தலா 5வது, 6வது இடத்தில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் எல்எஸ்ஜி அணி தலா 4 புள்ளிகளுடன் 8வது, 9வது இடத்தில் உள்ளன. கேகேஆர் அணி 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

zeenews


 


Post a Comment

0 Comments