
ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கத் துருப்பினர் மீட்டுக்கொள்ளப்படுவர் என்பதை எதிர்பார்த்ததாக ஜெர்மானியத் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) கூறியுள்ளார்.
அது குறித்து தெளிவுபெற வாஷிங்டனிடம் தகவல் கேட்டிருப்பதாக நேட்டோ கூட்டமைப்பு தெரிவித்தது.
பேரப்பேச்சு நடத்தும் ஈரானிய அதிகாரிகளால் அமெரிக்காவுக்குத் தலைகுனிவு ஏற்பட்டதாக ஜெர்மானியப் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) கூறியிருந்தார்.
அதனை அடுத்து துருப்பினரை மீட்டுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தற்போது 36ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கத் துருப்புகள் ஜெர்மனியில் உள்ளனர்.
அது ஐரோப்பாவிலேயே ஆக அதிகம்.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் துருப்பினரை மீட்டுக்கொள்ளத் திரு டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments