Ticker

6/recent/ticker-posts

சஞ்சுவின் அதிரடியில் சிதைந்தது டெல்லி... பிளே ஆப் நோக்கி பறக்கும் CSK


ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. பிளே ஆப் சுற்றுக்கு போக இரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் நடுவே முட்டிமோதி வரும் வேளையில் இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

பிளேயிங் 11 மாற்றம்

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் அக்சர் பட்டேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் கைல் ஜேமீசனுக்கு பதில் லுங்கி இங்கிடி அணிக்குள் வந்தார. சிஎஸ்கேவில் ராமகிருஷ்ண கோஷ், பிரசாந்த் வீர், சிவம் தூபே மூன்று பேருக்கு பதில் குர்ஜப்னீத் சிங், அகேல் ஹொசைன் சேர்க்கப்பட்டனர்.

டெல்லி செய்த தவறு

சிஎஸ்கே இந்த போட்டியில் இம்பாக்ட் வீரரை பயன்படுத்தவில்லை. டெல்லி அவசரப்பட்டு முதல் பேட்டிங்கிலேயே இம்பாக்ட் வீரராக ஒரு பேட்டரை (சமீர் ரிஸ்வி) தேர்வு செய்ததால், டெல்லிக்கு 6வது பௌலிங் ஆப்ஷன் இல்லாமல் போனது. இது சிஎஸ்கேவுக்கு பெரியளவில் கைக்கொடுத்தது.

டெல்லி பேட்டிங்

டெல்லி அணி முதல் பேட்டிங் செய்து பவர்பிளேவில் 37 ரன்களை அடித்து 2 விக்கெட்டை இழந்தது. பதும் நிசங்கா 19, கேஎல் ராகுல் 12 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து கருண் நாயர் 13, நிதிஷ் ராணா 15, அக்சர் பட்டேல் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 7வது பேட்டராக சமீர் ரிஸ்வி களம் புகுந்தார்.

ஸ்டப்ஸ் - ரிஸ்வி ஜோடி ஆறுதல்

6வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ் - ரிஸ்வி இணைந்து 65 ரன்களை குவித்தது. ஸ்டப்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அஷுடோஷ் சர்மா 5 பந்துகளில் 14 ரன்களை அடித்தார். ரிஸ்வி 24 பந்துகளில் 40 ரன்களை குவித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார். நூர் அகமது 2, குர்ஜப்னீத் சிங், ஓவர்டன், அகேல் ஹொசைன், முகேஷ் சௌத்ரி தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

156 ரன்கள் இலக்கு

அடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி சேஸ்ஸிங்கை தொடங்கியது. ருதுராஜ் 13 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 6 ரன்களை மட்டும் அடித்து ஆட்டமிழந்தார். இதனால், பவர்பிளேவில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் அடுத்து வந்த உர்வில் பட்டேல் பவர்பிளேவில் ரன்களை குவித்தார். 9 பந்துகளில் 2 சிக்ஸர் உடன் 17 ரன்களை அடித்து அவர் ஆட்டமிழந்தார்.

சஞ்சு - கார்த்திக் சர்மா

அடுத்து வந்த கார்த்திக் சர்மா, சஞ்சு சாம்சன் உடன் இணைந்து நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். சஞ்சு அரைசதம் அடித்த பின் அதிவேகம் காட்டினார். கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்கவே முடியவில்லை. இதனால், சிஎஸ்கே 156 ரன்களை, 15 பந்துகளை மிச்சம் வைத்து அடித்தது. 

zeenews


 


Post a Comment

0 Comments