Ticker

6/recent/ticker-posts

QR எரிபொருள் ஒதுக்கீட்டை உயர்த்த நடவடிக்கை – எரிபொருள் கையிருப்பு உறுதி


QR அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. அவற்றிலுள்ள எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முனையங்களில் இறக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

துறைமுக அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, முதல் கப்பலில் 20,000 மெட்ரிக் டன் பெட்ரோலும் 20,000 மெட்ரிக் டன் டீசலும் உள்ளது. இரண்டாவது கப்பலில் 35,300 மெட்ரிக் டன் பெட்ரோல் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், தலா 37,000 மெட்ரிக் டன் டீசல் கொண்ட இன்னும் இரண்டு கப்பல்கள் இம்மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையும் என இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

தற்போதைய கையிருப்பு மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை கருத்தில் கொண்டால், வரவிருக்கும் ஜூலை மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தேவையான அளவு விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கையிருப்பு நிலை சீராக உள்ளதால், கியூ.ஆர். எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றியும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

lankatruth


 


Post a Comment

0 Comments