
கோட்டாபய ராஜபக்சவின் நீதிமன்ற வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வந்த சட்டத்தரணி முகம்மது அலி சப்ரி, அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளாரா என்ற கேள்வி அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்குக் காரணமாக, கோட்டாபய ராஜபக்ச அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்காக சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் சட்ட நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடப்படுகிறது. அந்த மனுவில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
2016 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில், கோட்டாபய ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து, கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளை பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments