
இந்திய கிரிக்கெட்டில் இப்போது பேசுபொருளாயிருப்பது 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தான். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கவிருக்கும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இருபதுக்கு – 20 சர்வதேற்சப் போட்டித் தொடருக்கு சூரியவன்ஷி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சூர்யவன்ஷிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ)யாரும் எதிர்பாராத ஒரு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது!
அம்மாவும் அப்பாவும் கூடவே வரலாம்! செலவு பி.சி.சி.ஐ-யோடது!
இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் அனைவரும் 18 வயதைக் கடந்த பெரியவர்கள். முற்றிலும் மாறுபட்ட இந்த சூழலில் 15 வயது சிறுவன் தனியாகச் சிரமப்படக் கூடாது என்பதற்காக, அவருடைய பெற்றோரும் அவருடன் இந்த வெளிநாட்டுத் தொடருக்குப் பயணிக்க பி.சி.சி.ஐ சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அதுமட்டுமில்லங்க... அவர்களின் முழு பயண மற்றும் தங்குமிடச் செலவுகளையும் பிசிசிஐ-யே ஏற்கும் என போர்டு செயலாளர் தேவஜித் சைகியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
"பல தசாப்தங்களுக்குப் பிறகு..." " தேசிய அணியில் 14 அல்லது 15 வயது சிறுவன் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. அன்றைக்கு சச்சின் டெண்டுல்கர் இவ்வளவு இளம் வயதில் இந்திய அணிக்குள் வந்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு திறமைசாலி கிடைத்துள்ளார். அவர் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு" என சைகியா நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026-ல் செய்த ருத்ரதாண்டவம்!
சூர்யவன்ஷிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தெரியுமா? நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் பேட்டிங்கில் இவர் செய்த அட்ராசிட்டி அப்படி!
அடித்த ரன்கள்: 776 ரன்கள் (தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்)
ஸ்ட்ரைக் ரேட்: மிரட்டலான 237.30!
வென்ற விருதுகள்: தொடரின் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களுக்கான செம்மஞ்சள் தொப்பி, தொடரின் மதிப்புமிக்க மற்றும் வளர்ந்து வரும் வீரர் என அனைத்து முக்கிய விருதுகளையும் அள்ளிக்கொண்டுதான் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்.
இலங்கையில் வெடித்த மோதல்: பி.சி.சி.ஐ அதிரடி விளக்கம்!
தற்போது இலங்கை மண்ணில் நடக்கும் முத்தரப்பு 50 ஓவர் தொடரில் ‘இந்தியா ஏ’ அணிக்காக சூரியவன்ஷி விளையாடி வருகிறார். அண்மையில் இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சூர்யவன்ஷி உடல் ரீதியான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் சூர்யவன்ஷி மீது பி.சி.சி.ஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போகிறது என சமூக வலைதளங்களில் வதந்திகள் தீயாய் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தேவஜித் சைகியா:
"சமூக வலைதளங்களில் வருவதெல்லாம் வெறும் வதந்தி. இந்தத் தொடர் இலங்கை கிரிக்கெட் சபையில் கட்டுப்பாட்டில் நடக்கிறது. மைதானத்தில் என்ன நடந்தாலும் அதை அங்குள்ள போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்கள்தான் கவனித்துக் கொள்வார்கள். இதில் பி.சி.சி.ஐ தலையிடாது, தலையிடவும் கூடாது" எனத் தெளிவாகக் கூறி வதந்திகளுக்கு என்ட் கார்டு போட்டுள்ளார்.
அடுத்த இலக்கு... இறுதிப்போட்டி!
இந்த முத்தரப்பு தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், 153.94 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் வைபவ் ரன் குவித்துள்ளார். இவரது அதிரடியால் ‘இந்தியா ஏ’ அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஜூன் 21 அன்று தம்புள்ளயில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் சூர்யவன்ஷி மீண்டும் பட்டாசாய் வெடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments