Ticker

6/recent/ticker-posts

மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்..? ரசிகர்கள் அதிர்ச்சி.!


லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த லக்னோ அணி, கேஎல் ராகுலுக்கு பதிலாக அணியின் கேப்டனாக பன்ட்டை நியமித்தது.

கடந்த சீசனில் எதிர்பார்த்த வெற்றியை லக்னோ அணி பெறவில்லை, விளையாடிய 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து, லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பன்ட் விலகினார்.

இந்நிலையில் டிரேட் முறையில் ரிஷப் பன்ட் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு திரும்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 2016 முதல் 2024 வரை டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் விளையாடி உள்ளார்.

டிரேட் முறையில் ரிஷப் பன்ட்டை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக குல்தீப் யாதவை வாங்க லக்னோ அணி திட்டமுட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லக்னோ அணியில் 27 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ரிஷப் பன்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினால் ஏறத்தாழ 12 கோடி ரூபாய் வருவாய் இழப்பை எதிர்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

news18


 


Post a Comment

0 Comments