
குறும்புச் செயலால் 38,000 வெள்ளி நட்டம் ஏற்படுத்திய மகனைத் திட்டாமல் விட்ட தந்தையின் செயலைச் சீன இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
சீனாவின் ஷென்சென்னில் (Shenzhen) அந்தச் சம்பவம் நடந்தது.
5 வயதுச் சிறுவன் தீப்பொறிக்கு அருகே டிஷ்யூத் தாளைக் கொண்டுவந்தான்.
கொளுந்துவிட்டு எரிந்த தீ பின்னர் வீட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவத் தொடங்கியதாக South China Morning Post ஊடகம் கூறியது.
இருந்தாலும் சிறுவன் பதறவில்லை.
தீ இன்னோர் அறையில் உறங்கும் தந்தையை நெருங்காமல் இருக்க அவர் அறையின் கதவை மூடினான்.
சிறுவனும் பக்கத்தில் இருக்கும் மற்றோர் அறைக்குச் சென்றதாக South China Morning Post கூறியது.
புகையை நுகர்ந்த தந்தை பின்னர் விழித்துக்கொண்டார்.
அவர் தீயையும் அணைத்துவிட்டார்.
ஆனால் வீட்டில் அவர் நடத்திவந்த கைத்தொலைபேசி வியாபாரத்துக்கு வந்தது பெரும் பங்கம்.
30 கைத்தொலைபேசிகள் சேதமடைந்தன.
மொத்த மதிப்பு 200,000 யுவான் (38,047 வெள்ளி) இருக்கும்.
தந்தை மகனைத் திட்டவில்லை.
"இப்போது மகிழ்ச்சியா?" என்று மட்டுமே கேட்டார்.
அவரின் செயல் சமூக ஊடகத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
சம்பவமே சிறுவனுக்குப் பெரிய பாடம் என்று இணையவாசிகள் கருத்துரைத்தனர்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments