
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா்.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 135-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அரசுடன், கூகுள் நிறுவனம் கொண்டுள்ள உறவுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவு மாணவா்கள் குரல் எழுப்பி வருகின்றனா். குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் 1.2 பில்லியன் டாலா் மதிப்பில் கணினி சேவைகள் ஒப்பந்தத்தை கூகுள் நிறுவனம் மேற்கொண்டதற்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், சுந்தா் பிச்சை கலந்துகொண்ட பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இருந்து பாலஸ்தீன கொடிகள், பேனா்களுடன் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியவாறு மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments