Ticker

6/recent/ticker-posts

பல் வலின்னு போனவருக்கு...12 பற்களை பிடுங்கி அனுப்பிய பல் மருத்துவர்! வைரல் செய்தி..


சீனாவின் ஒரு பல் க்ளீனிக்கில், பல் வலி என சென்றவரின் 12 பற்களையும் பல் மருத்துவர் பிடுங்கி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு பின்னணியை இங்கு தெரிந்து கொள்வோம்.

வடிவேலு, ‘மறுபடியும் ஒரு காதல்’எனும் திரைப்படத்தில் போலி டாக்டராக நடித்திருப்பார். இதில், அவரிடம் பல் வலி என வரும் ஒரு நோயாளியின் பல்லை புடுங்குவார். அதற்கு அந்த நோயாளி ஒரு தொகையை கொடுக்க, ‘சில்ற இல்லையேப்பா..’ என சொல்லிவிட்டு அருகில் நல்லா இருக்கும் பல்லையும் பிடுங்கி விடுவார். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம்தான் சீனாவில் நடந்திருக்கிறது.

பற்களை பிடுங்கிய பல் மருத்துவர்:

சீனாவில் 63 வயது முதியவர் ஒருவர், பல் வலி காரணமாக, தன் வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு மருத்துவரை பார்க்க சென்றிருக்கின்றார். இவருடைய பெயர், லி. ஷான்க்சி எனும் இடத்தை செர்ந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் பல்வலி காரணமாக பல் மருத்துவரை பார்க்க சென்றுள்ளார்.

“காலையில் dental implant செய்து கொள்ளுங்கள், லஞ்சுக்கு கரியே சாப்பிடலாம்” போன்ற வாசகங்களை உபயோகித்து அந்த மருத்துவமனை விளம்பரம் செய்திருக்கிறது. இதனால் ஈர்க்கப்பட்ட அவர், அந்த விளம்பரங்களில் 100 வயதானாலும் உறுதியான பற்கள் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.

அந்த மருத்துவமனையிலிருந்து அவருக்காக கார் அனுப்பப்பட்டு, இலவசமாக பரிசோதனை செய்வோம் என்றும் கூறியிருக்கின்றனர். அங்கு சென்ற போது, நன்றாக இருந்த இவருடைய 12 பற்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு பதிலாக, 10 பற்கள் இவருக்கு கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு, அவருடிடம் கட்டணமாக 18,800 யுவான், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2.6 லட்சங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், அவருக்கு 6,200 யுவான் (ரூ. 87,000) செலுத்தப்படாத கட்டணமும் இருந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய நிலை குறித்து பேசிய லி, “என் மகனை நான் பார்க்கும் போது என் வாய் முழுவதும் ரத்தமாக இருந்தது. என்னிடம் பஸ்ஸிற்கு திரும்பி போக வெறும் 30 யுவான் மட்டுமே (ரூ.420) இருந்தது” என்று கூறியிருக்கிறார். 

லிக்கு ஏற்கனவே, பல்வேறு பிரச்சனைகள் உடலில் இருந்துள்ளது. இதய பிரச்சனை, நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்டவை உள்பட பல பிரச்சனை அவருக்கு உடலில் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். 

சில மருத்துவ நிலையங்களில், பல் பிடுங்கும் சிகிச்சைகளுக்கு முன்பு கூடுதல் எச்சரிக்கை தேவைப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. மேலும் சில சந்தர்ப்பங்களில், உடனடி பல் இம்ப்ளாண்ட்ஸ் பரிந்துரைக்கப்படாமல் போகலாம். வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையின் பல் மருத்துவர் ஒருவர், நீரிழிவு நோயாளிகள் தங்கள் நிலை சரியாகக் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பல் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

zeenews


 


Post a Comment

0 Comments