
ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் வேட்பாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் புதிய வங்கதேச அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு தப்பியோடிய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளரான முஹம்மது ஷஹாபுதீன் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே கடந்த மாதம் உடல் நலக் காரணங்களுக்காக ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது.
1991ம் ஆண்டுக்கு பின் வங்கதேசத்தில் நடைபெறும் முதல் போட்டி நிறைந்த அதிபர் தேர்தல் இதுவாகும்.
நேற்று நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் மொத்தமுள்ள 349 உறுப்பினர்களில் 343 பேர் தேர்தலில் வாக்களித்தனர். 6 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை.
இதில் ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் 255 வாக்குகளை பெற்றார்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரும், ஜமாஅத் இ இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளருமான ஒலி அஹ்மது 88 வாக்குகளை பெற்றார்.
இதனை தொடர்ந்து மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் புதிய அதிபராகியுள்ளார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments