
தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்கை, வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்லேவில் நடைபெற்ற இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையாளர் அறையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி கார்த்திக் இடையே உரசல் ஏற்பட்டது. மஞ்ச்ரேக்கர் முகத்தை சுருக்கி பேசும் பாவனையால் அவர் சொல்ல வரும் கருத்து பலருக்கு புரியவில்லை என முரளி கார்த்திக் கூறினார். இதற்கு பதில் அளித்த மஞ்ச்ரேக்கர், முரளி கார்த்திக் அழகாக இல்லை, அவரைவிட அழகானவர்களை கேமராவில் காட்டுங்கள் என்று தெரிவித்தார்.
கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டு சூப்பர், சூப்பர் என்று முரளி கார்த்திக் கூறி கொள்வார் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்தார். அதை மஞ்ச்ரேக்கர் தான் செய்வார் என்று முரளி கார்த்திக் பதிலடி கொடுத்தார். மதிய உணவு இடைவேளையின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என்றாலும் இறுதியாக மஞ்ச்ரேக்கர் பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார்.
மஞ்ச்ரேக்கர் கடைசியாக, "எப்படியிருந்தாலும், நாம் இருவரும் இங்கே வரம்புகளை மீறி பேசிவருகிறோம். சமூக ஊடகங்கள் இதைக் கொண்டாடித் தீர்த்துவிடும்" என்று எச்சரிக்கையாக பேசி முடித்துக் கொண்டார். எனினும், முரளி கார்த்திக் மீது பாகுபாடு காட்டும் வகையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடந்துக் கொண்டதாக சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments