Ticker

6/recent/ticker-posts

“ஹோர்முஸ் நீரிணை திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்” - ஈரான் அதிகாரிகள்


ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஒப்பந்தம் இன்றோ அல்லது நாளையோ கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் மற்றும் ஓமன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் ஓமன் நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, சரக்கு கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்து, ஓமன் நாட்டு கட்டுப்பாட்டில் உள்ள பாதை வழியாக வெளியேறும் என்றும், இதற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் கடல்சார் சூழலைப் பேணுவதற்கும் சேவைக் கட்டணம் வசூலிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்று வருவதாகவும், இறுதி ஒப்பந்தம், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்கத் தடையை நீக்குவதோடு இணைக்கப்பட்டிருக்கும் என்றும் ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஒப்பந்தம் இன்றோ அல்லது நாளையோ கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் நஜ்ரன் விமான நிலையம் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அந்த விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

news18


 


Post a Comment

0 Comments