Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 14


இன்னா நாற்பது - 25.

நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது.

விளக்கம்:
  • நண்பர்கள் படும் துயர்களைக் காண்பது துன்பமாகும். 
  • பகைவர்கள் நம் கண் முன்னால் ஆணவத்துடன் நடந்து கொள்வதைக் காண்பது துன்பமாகும். 
  • உற்றார் உறவினரோடு  சேர்ந்து வாழாமல் தனியாக இருப்பது துன்பமாகும். 
  • நண்பர்களுடன் சேர்ந்து சூதாடுவது மிகவும் துன்பமாகும்.

இன்னா நாற்பது -26.

பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா பெரியோர்க்குத் தீய செயல்.

விளக்கம்:
  • பெரியவர்களுடனான தொடர்பை விட்டு விடுவது துன்பமாகும். 
  • செய்வதற்கரிய செயல்களை செய்து முடிப்பேன் என்று வாய்ச் சவடால் விடுவது துன்பமாகும். 
  • நம் மீது அக்கறை காட்டாதவர்களிடம், நமக்கு இருக்கும் இன்னல்கள் குறித்து புலம்புவது துன்பமாகும். 
  • பெருமையுடையவர்களுக்கு  தீங்கு செய்வது துன்பமாகும்.
(தொடரும்)

 


Post a Comment

0 Comments