Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலின் மேலும் 61 நிறுவனங்கள் ஐ.நா. கறுப்புப்பட்டியலில் சேர்ப்பு


இஸ்ரேல் இப்பட்டியலை முற்றாக நிராகரித்துள்ளது, , இப்பட்டியலிலுள்ள நிறுவனங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது.

மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுடனான வணிகத் தொடர்புகள் மூலம் பலஸ்தீனியர்களின் மனித உரிமைகளை மீறுவதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிறுவனங்களின் கறுப்புப் பட்டியலில், மேலும் 61 நிறுவனங்களை ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் சேர்த்துள்ளது.

11 நாடுகளில் அமைந்துள்ள மொத்தம் 214 நிறுவனங்களில், பெரும்பாலானவை இஸ்ரேலிய நிறுவனங்களாகும். கடந்தாண்டு பட்டியலிடப்பட்ட 158 நிறுவனங்களில் ஐந்து, சமீபத்திய புதுப்பிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 2020 இல் முதன் முதலில் வெளியிடப்பட்ட இக்கறுப்புப் பட்டியல், ஐ.நா மனித உரிமைகள் சபையின் வாக்கெடுப்பின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். சட்டவிரோத குடியேற்றங்களுடன் தொடர்புள்ள வணிகங்களின் பெயர்களை வெளிப்படுத்துவதே இப்பட்டியலின் முக்கிய நோக்கமாகும்.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறுகையில், நிறுவனங்களுக்கு மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புகள் உள்ளன. மனித உரிமை மீறல்கள் அல்லது துஷ்பிரயோகங்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றுள்ளார்.


 


Post a Comment

0 Comments