
நாம் நினைப்பது போல் Artificial Intelligence என்பது அண்மைகால வளர்ச்சி அல்ல. இத்துறையின் வரலாறு சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பல ஏற்ற இறக்கங்களையும், தொழில்நுட்பப் புரட்சிகளையும் கடந்து வந்துள்ளது. அந்த வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
நாம் நினைப்பது போல் Artificial Intelligence என்பது அண்மைகால வளர்ச்சி அல்ல. இதுறையின் வரலாறு சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பல ஏற்ற இறக்கங்களையும், தொழில்நுட்பப் புரட்சிகளையும் கடந்து வந்துள்ளது. அந்த வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
கணிதமேதை ஆலன் ட்யூரிங் (Alan Turing), "கணினிகளால் சிந்திக்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பி, ஒரு இயந்திரம் மனிதனைப் போலச் சிந்திக்கிறதா என்பதைக் கண்டறிய 'Turing Test' என்ற சோதனையை முன்வைத்தார். இந்த சோதனை 1950- ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.
1956- ஆம் ஆண்டு அமெரிக்காவின் Dartmouth கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் கணித மேதை ஜான் மெக்கார்தி (John McCarthy), மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) போன்ற அறிஞர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்தான் 'Artificial Intelligence' என்ற சொல் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது.
1958-ஆம் ஆண்டு AI ஆராய்ச்சிக்கு இன்றளவும் பயன்படும் LISP என்ற Programming Language-யை ஜான் மெக்கார்தி (John McCarthy) உருவாக்கினார். LISP அதாவது List Processing என்பது கணினி வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த Programming Language. இது எண்களை மட்டும் கணக்கிடாமல், சொற்கள், கருத்துகள் மற்றும் லாஜிக் அமைப்புகளைக் கையாளும் திறன் கொண்டது. இதில் தரவுகள் மற்றும் குறியீடுகள் (Data & Code) அனைத்துமே பட்டியல்களாகவே சேமிக்கப்பட்டு இயங்குகின்றன.
LISP மொழியை உருவாக்கிய ஜான் மெக்கார்தி, AI-க்காக 'Garbage Collection' என்ற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இந்த 'Garbage Collection' கணினி தனக்கு பயன்படாத வீண் தரவுகளை அதுவே தானாக நீக்கிக்கொள்ளும். இன்று உலகளவில் இயங்கும் Python, Java, JavaScript என அனைத்து நவீன கணினி மொழிகளுக்கும் அடித்தளமிட்டது இந்த கண்டுபிடிப்புதான்.
1980-ஆம் ஆண்டு வரை AI ஆராய்ச்சித் துறையில் LISP மட்டுமே முதன்மையான Programming Language- ஆக இருந்தது. 1980-களில் நிதி, மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் மனித நிபுணர்களைப் போல முடிவெடுக்க உருவாக்கப்பட்ட 'Expert Systems' LISP மொழியிலேயே எழுதப்பட்டன.
1966-இல் உருவாக்கப்பட்ட உலகின் முதல் உளவியல் Chatbot ஆன ELIZA, LISP மொழியைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. பின்னர் 1980- ஆம் ஆண்டுகளில் மனித நிபுணர்களைப் போல முடிவெடுக்கும் அமைப்புகளையும் Deep Learning தொழில்நுட்பங்களையும் கணிணி நிறுவனங்கள் தொடங்கின.
ஜப்பான் போன்ற Tech-savvy நாடுகள் AI கம்ப்யூட்டர்களை உருவாக்க ஆயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கின. ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்கும் நிலைக்கு AI துறை வளர்ச்சி அடைந்தது. பின்னர், AI துறை சில தடங்கல்களையும் சந்தித்து. AI அமைப்புகளின் அதிக செலவு மற்றும் அதற்கேற்ற பலன்கள் உடனடியாகக் கிடைக்காததால், அரசுகளும் முதலீட்டாளர்களும் நிதி வழங்குவதைக் குறைத்தனர். இது 'AI Winter' என்று அழைக்கப்படுகிறது.
பின்னர் மெல்ல மனிதனின் அன்றாட பயன்பாட்டிலும் AI நுழைந்தது. 1997- ஆம் ஆண்டு IBM- உருவாக்கிய Deep Blue கம்ப்யூட்டர், உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவை வீழ்த்தியது. சீனா, ஜப்பான் நாடுகளில் மருத்துவதுறை முதல் வீட்டை சுத்தம் செய்வது வரை மனிதனுக்கு பயன் அளிகும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டன.
2021-ல் OpenAI-ன் GPT-3 மற்றும் DALL-E மாடல்கள் அறிமுகமாகி, மனிதர்களைப் போலவே உரை மற்றும் படங்களை உருவாக்கும் Generative AI புரட்சியைத் தொடங்கின. தற்போது, AI தொழில்நுட்பம், வெறும் உரையாடல் Chatbots-களாக மட்டுமே இருந்த நிலையைத் தாண்டி, தன்னிச்சையாகச் செயல்படும் ஏஜென்ட்கள் மற்றும் அறிவியல்பூர்வப் புதிர்களைத் தீர்க்கும் கட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
வரலாற்றில் தீப்பெட்டி முதல் அணுஆயுதம் வரை மனிதன் கண்டுபிடித்த ஒவ்வொரு தொழில்நுட்பமும் இருமுனைக் கத்தியாகவே இருந்துள்ளது. 70 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தில் மனிதனின் மிகப்பெரிய உதவியாளராக வளர்ந்துள்ள AI, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கான வரப்பிரசாதமாக மாறுமா அல்லது அதன் கட்டுப்பாடற்ற சுய இயக்கத்தால் பேராபத்தாக முடியுமா என்பதை இனிவரும் காலங்களில் நாம் அமைக்கும் பாதுகாப்பு விதிகளே தீர்மானிக்கும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments