Ticker

6/recent/ticker-posts

ஶ்ரீ.ல.மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் பதவி விலகினார்!


வெற்றிடம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாசித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

(14) முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை அவர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைய, 10ஆவது பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்குக் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி, வெற்றிடமாகியுள்ள குறித்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்புவதற்காக, உரிய சட்ட விதிகளுக்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

thinakaran


 


Post a Comment

0 Comments