Ticker

6/recent/ticker-posts

அமீரகத்துக்கு பறக்கும் கார் பரிசளித்த சீனா... வெளியான அசத்தல் வீடியோ!


தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பறக்கும் காரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சீனா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உச்ச கவுன்சில் உறுப்பினரும், ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான அல் காசிமி, சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்சோ நகரில் XPENG AEROHT நிறுவனத்தின் பறக்கும் கார் உற்பத்தி ஆலையை அவர் பார்வையிட்டார். அப்போது, Land Aircraft Carrier எனப்படும் பறக்கும் கார், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பரிசளிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மேற்பார்வையில் சோதனை ஓட்டமாக மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு, அமீரகத்தின் பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையிலான விமான வழித்தடங்களுக்கு இயக்க திட்டமிட்டு இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில்தான் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை 'ரோட்ஸ்டர்' (Roadster) ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிநவீன பறக்கும் காரின் முன்மாதிரியை அதிகாரப்பூர்வமாக டெமோ காட்டி அறிமுகப்படுத்தியிருந்தது. இது வழக்கமான விமானங்கள் போல நீண்ட தூரம் பறப்பதற்கானது அல்லாமல், காற்றில் எழும்பி சாகசங்களைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது நடந்த ஒருசில தினங்களில் இந்த பறக்கும் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments