Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-60


குறள் 290:

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு.

களவாடி வாழ்வோரைத் தன்னுயிரே தூற்றும்! தவிர்த்தால் புகழுலகம் உண்டு.

வாய்மை

குறள் 291:

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல்.

யாருக்கும் தீமை பயக்காமல் சொல்வதே வாய்மை எனப்படும்! கூறு

குறள் 292:

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.

பொய்சொன்னால் குற்றமற்ற நன்மை கிடைக்குமென்றால் பொய்கூட வாய்மைதான் சொல்.

குறள் 293:

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

நெஞ்சறிய பொய்பேசி வாழவேண்டாம்! பேசினால் நெஞ்சே பொசுக்கும் உணர்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments