
கைத்தொலைபேசி, கணினித் திரைகளிலிருந்து வரும் நீல ஒளி சருமத்தைப் பாதிக்குமா?
முகத்தில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் மெலாஸ்மா (Melasma) எனும் சருமப் பிரச்சினைக்கு அது காரணமாகுமா?
அது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சூரிய ஒளி, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மரபணுக்கள் ஆகியவை மெலாஸ்மா ஏற்பட முக்கியக் காரணங்கள்.
சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் நீல ஒளி சருமத்தில் கருமையை அதிகரிக்கக்கூடும்.
ஆனால் கைத்தொலைபேசியிலிருந்து வரும் நீல ஒளி?
அது மெலாஸ்மாவை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும் என்பதற்கு இதுவரை அறிவியல் ஆதாரம் இல்லை.
இதற்கிடையே, சருமத்தில் கரும்புள்ளிகள், மெலாஸ்மா பிரச்சினைகள் ஆகியவற்றுக்குச் சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
நீல ஒளியின் தாக்கத்தைக் குறைக்க சாதனங்களின் திரை வெளிச்சத்தைக் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதைவிட, சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதே மிக முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
SPF 50, PA++++ பாதுகாப்புக் கொண்ட Sunscreen அதாவது சூரிய ஒளித் தடுப்புக் களிம்பை மருத்துவர் பரிந்துரைத்தார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments