Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் உணவில்லை ,மருந்தில்லை ,மரணமும் குறைந்தபாடில்லை ,மயானத்திலும் இடமில்லை...

வட மாகாணத்தை பொறுத்தவரையில் கொரோனா மரணங்கள் அதிகரித்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமே எரிவாயு மயானங்கள் இயங்கி வருகின்றது.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தர்களை எரியூட்டும் ஒரேயொரு எரிவாயு மயானமாக காணப்பட்ட வவுனியா பூந்தோட்டம் மயானம் பழுதடைந்துள்ளமையினால் சடலங்கள் எரியூட்டப்படாமல் தேங்கும் நிலை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் அதிகளவான மரணங்களால் எமது மயானம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் மயானமாக செயற்பட்டு வருகின்றது. இதனால் நாம் பாரிய சவால்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கின்றோம். எனினும் எமது மக்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் உள்ளது எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காலை 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரையும் சடலங்கள் எரிக்கப்பட்டது. இதற்கும் மேலதிகமாக நேரப்பற்றாக்குறையினால் வவுனியா வைத்தியசாலையில் இன்னும் சடலங்கள் எரியூட்டப்படாமல் உள்ளது.

இந்த மயானம் செயலிழந்துள்ளது. எனினும் இதனை மீள இயக்குவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றோம். அதனை பழுதுபார்க்க கூடியவர்கள் எவரும் வவுனியாவில் இன்மையால் கொழும்பில் இருந்தே வரவேண்டியுள்ளது.

ஒருநாள் எமது மயானம் இயங்காது விடும் பட்சத்தில் சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகின்றது.

எனவே அரசாங்கம் இவ்வாறான அனர்த்த நிலைமையில் தங்களால் செய்யக்கூடிய உதவிகளை உடன் செய்யுமாறு வேண்டுகின்றோம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு எதிர்வரும் நாட்களில் இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப் படும் .அதேவேளை உணவுப் பற்றாக் குறையால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படலாம் .என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அன்றாடம் மக்கள் பாவனையிலிருக்கும் பொருட்களின் விலை ஏற்றம் மிக மிக மோசமான ஒரு செயல் என்று எதிர்க் கட்சிகள் விமர்சித்தும் அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகள் குறைந்த பாடில்லை.

இலங்கையில்  உணவில்லை ,மருந்தில்லை ,மரணமும் குறைந்தபாடில்லை ,மயானத்திலும் இடமில்லை...

எங்கே போய் முடியும் இலங்கையின் எதிர்காலம்?


Post a Comment

0 Comments