அறிவு வேட்டை, ரசனை வேட்டை, தெளிவு வேட்டை,இத்தகைய எல்லா வேட்கைகளுக்கும் இந்த வேட்டை களமிறங்கி பரிணமித்து ஐந்து வருடங்களை அண்மித்து இருக்கிறது.
நேர்த்தியும், அழகும், ஒழுங்கும், கருத்துச் செறிவும் மிக்க ஆக்கங்களை சமூகத்திற்கு சரளமாகவும் தாராளமாகவும் தெரிவுபடுத்தி , களம் தேடும் திறன் கொண்ட கலைக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகையான 'வேட்டை' பல்வேறு அறிவுப் புதையழுக்கான ஓர் வேட்டைச் சிங்கமாக வீறுநடையில் வலம்வந்து, புத்தாக்கத்தோடும் ஊக்கத்தோடும் வெற்றி படைக்க வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
சஞ்சிகை ஆசிரியர் , பணியாற்றும் அத்தனை பேருக்கும் என்றென்றும் எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.
(27/08/2021)
கலைக்குரல் லைலா அக்ஷியா.
கவிஞர், எழுத்தாளர்.ஆசிரியர்.
மாணவர் உளவளத்துணை ஆலோசகர்.
0 Comments