
பச்சை மிளகாயில் கேப்சைஸின் எனப்படும் காம்பவுண்டு அதிக அளவில் இருக்கிறது. இது தான் மிளகாயின் காரத்தன்மைக்கு காரணம்.
பச்சையாக சாப்பிடுவது முதல், வறுத்து, பொறித்து, தாளித்து சாப்பிடுவது வரை, பச்சை மிளகாயை பல்வேறு விதமாக சமைக்க பயன்படுத்தலாம். காரத்துக்கு மட்டுமின்றி, மணம் சேர்க்கவும், பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய், வைட்டமின்கள் நிறைந்தது. அது மட்டுமின்றி, பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது.
ஜீரோ கலோரி என்ற அற்புதமான நன்மையை பச்சை மிளகாய் அளிக்கிறது. பச்சை மிளகாய்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை 50% வரை அதிகரிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு அளிக்கிறது. பச்சை மிளகாயில் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. இவை உடலில் ஏற்படும் ஃப்ரீரேடிகல்சை தடுத்து, உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவி செய்கிறது.
இதய பாதுகாப்பு – பச்சை மிளகாய் சாப்பிடுவது, கார்டியோ வாஸ்குலார் நோய்கள் எனப்படும் இதய ரீதியான பிரச்சனைகளை குறைக்கிரத்தி. குறிப்பாக, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, டிரைகிளைசிரைடு அளவுகள் மற்றும் பிளேட்லெட் சேகரிப்பை தடுத்து, அதிரோஸ்க்லேரோசிஸ் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கூடுதலாக, ஃபிப்ரியோலிட்டிக் செயல்பாடு, ரத்தம் கட்டிக்கொல்வதைத் தடுக்கிறது. இதனால், ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
இதையும் படிங்க :
புகைத்தல் பழக்கத்திலிருந்து கணவனை விடுவிக்க வழி என்ன?
பச்சை மிளகாயில் கேப்சைஸின் எனப்படும் காம்பவுண்டு அதிக அளவில் இருக்கிறது. இது தான் மிளகாயின் காரத்தன்மைக்கு காரணம். இது உடலின் தட்பவெப்ப நிலையைக் குறைத்து, மூளையின் ஹைப்போதலாமஸ் என்ற பகுதியை குளிர்ச்சியாக்குகிறது. அதனால் தான், இந்தியாவில் வெப்பமான இடங்களில் எல்லாம் பச்சை மிளகாயின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
கேப்சைசின் ரத்த ஓட்டத்தை தூண்டி, மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மெம்ப்ரேன் மற்றும் சைனஸ் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மியூக்கஸ் எனப்படும் சளி உருவாக்கம் மெல்லியதாகிறது. இதனால், சளி பிடித்தல், சைனஸ் தொற்று ஆகிய நோய்கள் குறைகின்றன.
வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் பச்சை மிளகாய், கண்கள், சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
பச்சை மிளகாய் சாப்பிடும் போது, உடலில் எண்டார்ஃபின்ஸ் சுரக்கும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தி, வலி ஏற்படுவதைத் தடுக்கும்.
இதில் உருவாகும் வெப்பம், உங்கள் உடலில் வலி நிவாரணியாக செயல்பட்டு, ஆன்டி-அல்சர் மருந்தாகவும் செயல்படும்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க விரும்பினால், பச்சை மிளகாய் சாப்பிடுவது பலனளிக்கும்.
இரும்பு சத்து குறைபாட்டுக்கு மிகச்சிறந்த இயற்கையான நிவாரணங்களில் ஒன்று, காரமான பச்சை மிளகாய்.
பச்சை மிளகாயில் இருக்கும் பாக்டீரியா-எதிர்ப்பு அம்சம், உங்கள் சருமத்தில் உண்டாக்கும் தொற்றுகளை நீக்க உதவுகிறது.
உணவுகளில் அரிதாகவே காணப்படும் வைட்டமின் கே என்ற முக்கியமான ஊட்டச்சத்து, பச்சை மிளகாயில் நிறைந்துள்ளது. இது காயம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் ரத்த போக்கை நிறுத்தி, இரத்தம் உறைய உதவும். அது மட்டுமின்றி, எலும்பு குறைபாடான ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் வராமல் தடுப்பதற்கும் பச்சை மிளகாய் உதவும்.
சுவைக்காக, மணத்துக்காக மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்காகவும், பல்வேறு உடல் நன்மைகளுக்காகவும், பச்சை மிளகாயை உணவில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments