Ticker

6/recent/ticker-posts

புகைத்தல் பழக்கத்திலிருந்து கணவனை விடுவிக்க வழி என்ன?


எனது
கணவர் கடந்த 15 வருட காலமாகத் தொடர்ந்து கிகரட் புகைக்கிறார். இப்பழக்கத்தை கைவிடுவதற்கு தனக்கு விருப்பமாக இருந்த போதிலும் கைவிடுவது என்பது கஷ்டமாக இருப்பதாகக் கூறுகிறார். இதற்காக யுனானி மருத்துவத்தில் ஏதும் சிகிச்சை உண்டா ? தயவு செய்து அறியத்தரவும்.
பர்மிளா ,மீதொட்டமுல்ல

பதில்: மனிதன் உயிர் வாழ்வதற் கான ஆகாரங்களும் காற்றும் எமது | உடம்பினுள் செல்வதற்கான ஏற்பாடாக எல்லாம் வல்ல அல்லாஹ் சமிபாட்டுத் தொகுதியையும் சுவாசத்தொகுதியையும் படைத்ததோடு உணவு வகைகளையும் காற்றையும் நாம் வாழும் சுற்றாடலி லேயே கிடைக்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்துள்ளான். ஆனால் மனிதன் இந்த அருட்கொடைகளை புறக்கணித்தும் தனது உடல் நலத்தில் அக்கறையின்றியும் அற்ப சந்தோசத்திற்காகவும் திருப்திக்காகவும் இந்த அருட்கொடைகளை தவறாகப் பாவிக்கின்றான் என்பது தான் கவலைக் குரிய விடயம்

 சுவாசத் தொகுதியின் தொழில்கள் தான் உட்சுவாசத்தின் போது சுத்தமான காற்றை உள் எடுப்பதுவும் வெளிச் சுவாசத்தின் போது காபனீரொட்சைட் உட்பட அசுத்த வாயுகளை வெளியேற்றுவதும் ஆகும்.

 ஒருவர் விறகு அடுப்பைப் பயன்படுத்தி உணவு சமைக்கும் போது வெளி வரும் புகையைச் சுவாசிப்பதனால் ஏற் படும் அசௌகரியத்தை நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டியதில்லை.

 ஆனால் ஒருவர் சிகரட் புகைக்கும் போது விறகு எரியும் போது வெளி யாகும் புகையினால் ஏற்படுகின்ற அசெள கரியத்தை விடவும் உடல் நலத்திற்குப் பாரிய தீங்கு ஏற்படுவதோடு தனது வருடாந்த வருமானத்தில் பெருமளவு தொகையை சிகரட்டிற்காகவும் புகைப்ப தனால் ஏற்படுகின்ற நோய்களுக்காவும் செலவு செய்கின்றான் என்பது தான் ஒரு அதிர்ச்சியான தகவல்.

 நான் மேற்குறிப்பிட்டுள்ள படி சுவாசத் தொகுதியினூடாக உட்செல்லுகின்ற சுத்தமான காற்றுத் தான் எமது உடல் நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் சிகரட் புகைப் பவர்கள் சுத்தமான காற்று உட்செல்லக் கூடிய சுவாசத் தொகுதியினூடாக உடம்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய புகையை உட்செலுத்தி தன்னைத் தானே அழிப்பதற்கான அடித்தளத்தினை இடு கின்றான்.

 நம்மில் அனேகமானவர்கள் தமது சொந்தப் புத்தியைப் பாவித்துப் பிரச்சி னைகளைத் தீர்த்துக் கொள்ளாது எந்த வொரு பிரச்சினை ஏற்பட்டாலும் அது யஹூதி நசாராக்களின் திட்டம் எனக் கூறுகிறார்கள். எனவே சிகரட் புகைத்து எமக்கு நாமே தீங்கு செய்து கொள்வதும் யஹூதி நசராக்களின் திட்டமா என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டியது அவசியமாகும்.

 ஒருவர் சிகரட் புகையை உட்கொள்ளும், போது 480 வகையான நச்சுத் தன்மையு டைய இரசாயனப் பதார்த்தங்களை உட் கொள்கிறோம் எனவும் அதில் 60 வகை

யானவைகள் புற்றுநோயை ஏற்படுத்தக கூடியது எனவும் எம் அநேகருக்குத் தெரி யாது. அதிலும் நிகொட்டின் (Nicotine) எனப்படும் இரசாயனப் பொருள் குறு கிய நேர மனச் சந்தோசத்தை (Pleasure inducing brain chemical) தரக்கூடியதாக இருப்பதோடு புகைத்தலுக்கு ஒருவரை அடிமைப்படுத்தக் கூடிய தன்மையைக் கொண்டது.

 ஒருவர் புகையிலையை வெற்றிலை யுடன் மென்றால் அவரை ஒரு நாகரிக மற்றவர் என எண்ணும் அதேவேளை புகையிலையைக் கடதாசியில் சுற்றி சிகரட் வடிவில் புகைத்தால் அவர் நாக ரிகமானவர் எனவும் கருதுவதென்றால் நாகரிகம் என்ற சொல்லுக்கு வேறு வரை விலக்கணம் கொடுக்க வேண்டியேற்படும் அல்லவா?

அத்துடன் எம்மை ஒருவர் கத்தியைக் காட்டி உடம்புக்குத் தீங்கு விளை விப்பேன் எனப் பயமுறுத்தினால் நாம் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக் கைகளை எடுப்போம். ஆனால் சிகரட் பெட்டியில் 'நீ புகைத்தால் நான் உனது உடம்புக்குத் தீங்கு செய்வேன்" எனப் பயமுறுத்தினாலும் கூட நாம் சிகரட்டை நண்பனாக்கிக் கொள்கிறோம்.


சிகரட்
புகைப்பதனால் 73% சுவாசத் தொகுதி நோய்களும் 20% மாரடைப்பும் 30% திடீர் மரணத்திற்கும் காரணமென்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய மான விடயமாகும். அத்துடன் புகைத்த லுக்கு அடிமையானவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டால் அந்த நோயிலி ருந்து மீள்வதற்கான காலம் நீடிக்கும் என் பது ஒரு முக்கியமான விடயமாகும்.

நவீன ஆராய்ச்சியொன்றின்படி சிகரட், புகையிலையில் அடங்கியுள்ள நிகொட்டின் (Nicotine) என்ற இரசாயனப் பதார்த்தத்தை மாத்திரம் ஒரு கடுகு அளவில் எடுத்து நீரில் கரைத்து நேர டியாக இரத்த நாளங்களுக்குச் செலுத் தினால் உடனடியாக மரணமேற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புகைத்தலினால் ஏற்படுகின்ற நோய்களிலிருந்து சாதாரண நிலைக்கு வருவது ஒரு கடினமான விடயமாகும். ஒருவர் புகைக்கும் போது அருகிலுள்ள வர்களையும் விசேடமாகச் சிறுவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன.

ஒருவர் சராசரியாக 1 நாளைக்கு 10 சிகரட் புகைப்பாரானால் தினமும் 350 ரூபாய், மாதாந்தம் 10500 ரூபாவை தனது வருமானத்திலிருந்து எரித்து சாம்ப லாக்குகிறார் என்பதை உணர வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படையில் நோக்கும் போது புகைத்தல் ஹராம் என்பதே உலமாக்களின் முடிவு. ஆனால் நன்கு கற்ற ஒரு சில மெளலவிமார்களும் ஹஜ் கடமையை மேற்கொண்டவர்களும் இந்த உண்மையைப் பற்றிச் சிந்திக்காமல் புகைப்பதும் வியக்கத்தக்க விடயமாகும்.

நாம் மன உறுதியுடன் செயற்பட்டால் இன்ஷா அல்லாஹ் புகைத்தலை நிறுத் தலாம். அவ்வாறு நிறுத்தினால் முதல் 24 மணி நேரத்தில் அதிக குருதி அழுத் தமும் நாடித் துடிப்பும் குறையும். ஒரு கிழமைக்குள் சுவாசிப்பது இலகுவாகுவ தோடு மணம் சுவை போன்றவைகளை உணர முடியாதவர்களுக்கும் படிப்படி யாக நிவாரணம் கிடைக்கும்.

புகைத்தலை நிறுத்தும் போது மீண்டும் புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்ப்பதற்காகவும் புகைத்தலினால் ஏற்பட்ட நச்சுத் தன்மையை வெளியேற் றுவதற்காகவும் யுனானி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் பலர் பலன் பெற்றும் உள்ளனர்.

Also read MORE...ஆரோக்கியம்

இறுதியாக வாசகர்களுக்கு விஷேசடமாகப் புகைத்தலுக்கு அடிமை யானவர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது புகைத்தல் மூலம் உங்களதும் உங்களைச் சார்ந்தவர்களதும் உடல் நலம், மன நலம், பொருளாதாரம் போன்றவைகளுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக புகைத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் வேண்டுகிறேன்.

 DR.NASEEM





Post a Comment

0 Comments