Ticker

6/recent/ticker-posts

Ad Code



நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை!-1


அத்தியாயம் -1
அல்லாஹ் -  அண்ட சராசரங்களைப் படைத்து,  வானம், புவி  ஆகியவற்றை அதற்குள் வடிவமைத்து, புவியிலே  மலைகள், கடல், பயிரினம், விலங்கினம், காற்று, மழை, இடி, மின்னல் என்பவற்றை ஏற்படுத்தி, இவற்றையெல்லாம் பிரயோசனப்படுத்தி வாழ்வதற்காகவும், தன்னைச் சிரம் பணிந்து  வணங்குவதற்காகவும்    இறுதியாக மனிதனை  உருவாக்கினான்! அண்ட சராசரங்கள் 450 கோடி வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டதாகவும்,  புவி  படைக்கப்பட்டு 195 போடி வருடங்களாவதாகவும் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்!

புவி  படைக்கப்பட்டதிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக 18 படைப்பினங்களை அல்லாஹ் படைத்து அவற்றைப் புவிப்பரப்பில் வாழ விட்டபோதிலும்,  அவை காலத்துக்குக் காலம் இல்லாமற் போனதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன! அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராணியொன்றின் எலும்புக்கூடொன்று 50 கோடி வருடங்களுக்கு முன்னர்  வாழ்ந்த பிராணியுடையதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்!

முதல் மனிதன் படைக்கப்பட்டவுடனேயே மனித இனத்தை வழிகெடுப்பதற்கு ‘ஷைத்தான்’ அல்லாஹ்விடம் வரம் வாங்கிக் கொண்டான். அப்போதுதான் - மனித இனத்தை ஏனைய உயிரினங்களிலிருந்தும் மேம்படுத்துவதற்காகஅல் லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்தான்! ஷைத்தானின் வழியிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும், நன்மை, தீமைகளைப் பகுத்துணரவும்  “பகுத்தறிவு”  மனித இனத்திற்கு அல்லாஹ்வால்  கொடுக்கப்பட்ட  பரிசாகும்!

அல்லாஹ் மனித இனத்திலிருந்து காலத்துக்குக் காலம் நபிமார்களை அல்லது அவனது தூதர்களை  உலகிற்கு  அனுப்பி வைத்து அவர்களைக் கொண்டும் மனித இனத்தை நேர்வழிப்படுத்த விளைந்தான்!
ஒரு இலட்சத்து இருபத்தி நாலாயிரம் நபிமார்கள் உலகில் அவதரித்ததாகக் கூறப்பட்டபோதிலும், நபி ஆதம் (அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை அல்-குர்ஆனில் 24 நபிமார்கள் பற்றி மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன!
  
நபிமார்கள் அல்லது ரசூல்மார்கள் எனப்படும் தூதர்கள் அனைவரும்  அல்லாஹ்வின் ஏவலை ஏற்று, விலக்கலைத் தவிர்ந்து நடக்குமாறு ஏவுவதன் மூலம், மக்களை நேர்வழிப்படுத்துவதையே தமது  குறிக்கோலாகக் கொண்டிருந்தனர். சூட்சுமஅறிவு, உண்மை பேசுதல், நேர்வழிக்கான பிரசாரம், நம்பிக்கை போன்ற சிறப்புப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு அனைத்து நபிமார்களும் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் எப்போதும் தமது சொந்த உழைப்பில் வாழ்ந்தவர்களே தவிர அவர்கள் ஒருபோதும்  யாசித்ததில்லை!
 (தொடரும்) 

Post a Comment

0 Comments