நபி இப்றாஹீம் (அலை)
நபி ஹூத் (அலை) அவர்களின் சகோதரரான அபீருக்கு ஒரே மகன் மாலிக். மாலிக்கிற்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் ராகு. மற்றவர் நஹ்ரூத். மூன்றாமவர் மல்கான். இதில் நஹ்ரூதுக்கு சந்ததிகள் இல்லை. மல்கானுக்கு ஒரே மகன் கித்ர். கித்ருக்கு சந்ததிகள் இல்லை. ராகுவின் மகன் ஸரூக். ஸரூக்கின் மகன் நஹூர். நஹூரின் மகன் அஸார். அஸாரின் மனைவி ஆஷா. அஸார் நும்ரூதின் அரசவையில் காவலாளியாக வேலை செய்தவர். அஸாருக்கு மூன்று பிள்ளைகள் - நபி இப்றாஹீம் (அலை), ஹாரன், நாஹூர். நாஹூருக்கு சந்ததிகள் கிடையாது. இப்றாஹீம் (அலை) அவர்களின் சகோதரர் ஹாரானும் நும்ரூதின் அரசவையிலேயே தொழில் புரிந்தார்.
ஈராக்கிலுள்ள பபிலோன் நகரில் பிறந்து வளர்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பத்துக் கட்டளைகளை வழங்கி மக்களை நேர்வழிப்படுத்தக் கோரினான். இப்றாஹீம் (அலை) அவர்கள் நும்ரூத் அரசனின் தண்டணைக்கு ஆளாகி நெருப்பில் எறியப்பட்டார்கள். அல்லாஹ்வின் கருணையால் நெருப்பு இவர்களைச் சுடவில்லை.
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் எகிப்து, அறாபியா போன்ற இடங்களுக்குச் சென்று தமது சன்மார்க்கப் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். இவர்கள் சாரா (அலை), ஹாஜரா (அலை) என்போர்களை மணந்தார்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சகோதரரான ஹாரனின் மகனே நபி லூத் (அலை) ஆவார்கள். இப்றாஹீம் (அலை) அவர்களின் மற்ற சகோதரர் நாஹூர், தகப்பனார் அஸார் இறை நிராகரிப்பாளர்களாக வாழ்ந்து மறைந்தமை குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
0 Comments