சின்ன வெங்காயத்தின் பயன்கள் !

சின்ன வெங்காயத்தின் பயன்கள் !

காய்கறிகளுள் மிகவும் காரமானது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம். இவற்றில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் மிகவும் காரமாக இருக்கும்.

ஆனால் வெங்காயத்தில் அவ்வளவாக காரம் கிடையாது. அத்தகைய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

வெங்காயத்தில்உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும். வெட்டுக்காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.
வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் வீசும் என்று சங்கடப்படுவதுண்டு.

அதைப் பார்த்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்காது. சாப்பிட்டுவிட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். துர்நாற்றம் ஓடிவிடும்.
நெஞ்சு வலி காரணமாக இதய உள்ள ரத்த நாளங்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும்.

பக்க வாதம் கூட அதனால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்படி நெஞ்சுவலி பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும்.

இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும்.  

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் அரை டீஸ்பூன் வெங்காயம் சாறினை காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் பெறும்.

இதை போன்று வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வாந்தால் இருமல், இரத்த வாந்தி, ஜலதோசம் மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் குணமாகும். இதன்மூலம் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.  

Post a Comment

Previous Post Next Post