Ticker

6/recent/ticker-posts

நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை! -அத்தியாயம் -14


நபி  ஈஸா (அலை)
நபி சுலைமான் (அலை) அவர்களின் இன்னொரு மகனான ரஹ்ஸாமின் 24வது சந்ததியாகப்  பிறந்த இன்ரானுக்கு இரண்டு பெண் மக்கள்.  ஒருவர் அஷ்-ஷாஹ், மற்றவர் நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் ஆவார். அஷ்-ஷாஹ்வின் கணவர் நபி ஷக்கரிய்யா (அலை) ஆவார். அஷ்-ஷாஹ்வுக்கும் நபி ஷக்கரிய்யா (அலை) அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர் நபி யஹ்யா (அலை) ஆவார்.

நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜீல் வேதம் அருளப்பட்டது. அல்-குர்ஆனில் 19வது அத்தியாயத்தில்  நபி ஈஸா (அலை) அவர்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நபி ஈஸா (அலை) அவர்களுக்கும் அல்லாஹ் அற்புதங்கள் செய்யும் சக்தியை வழங்கியிருந்தான். அவர்களது நண்பர்கள் “ஹவாயிய்யீன்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.
நபி ஈஸா அவர்களின் பிறப்பிலிருந்து சரித்திராசிரியர்களால் கிறிஸ்து வருடம் கணக்கிடப்படுகின்றது. கி. பி. முதலாம் ஆண்டில் பிறந்த நபி ஈஸா (அலை) அவர்கள் கி. பி. 33ல் வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள்.
                                   
நபி ஈஸா (அலை) அவர்களின் இறுதிக் கால நிகழ்வுகள் குறித்து, அவர்களுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ‘சுவிசேஸகர்கள்’ எழுதி வைத்ததில் பல முரண்பாடுகள் காணும் நிலையில், ஈஸா (அலை) அவர்களது நேரடிச்சீடர்களில் ஒருவராக இருந்த "பர்னபாஸ்" என்பவரின் ‘சுவிசேஸம்’ கூறும் செய்திகளில், "அவர் வானத்திற்கு உயர்த்தப்பட்டார் என்றும், அவருக்கு வேறொருவர் ஒப்பாக்கப்பட்டான்" என்றும் குறிப்பிடும் அல்-குர்ஆனின் செய்தியை முற்றிலும் உண்மைப்படுத்துகின்றது!
 
உலக அழிவிற்கு சிறிது காலத்துக்கு முன்னர் நபி ஈஸா (அலை) அவர்கள் மறுபடியும் தோன்றி, நாற்பது வருடங்கள் உலகில் தங்கி, அநியாயக்காரனான தஜ்ஜாலைக் கொலை செய்து, உலகில் சமாதானத்தை நிலை நிறுத்தி, நல்லாட்சி நடாத்திய பின்னர் மரணிப்பார்கள் என்று அல்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)

Post a Comment

0 Comments