Ticker

6/recent/ticker-posts

சோமாலியா,எதியோப்பியா போன்ற நாடுகளின் நிலைமைக்கு இலங்கை மாறும் வாய்ப்புக்கள் அதிகம்

சோமாலியா,எதியோப்பியா போன்ற நாடுகளின் நிலைமைக்கு  இலங்கை தள்ளப் பட்டுக்கொண்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

திட்டமிடப்படாத பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் வறுமை தலைவிரித்தாடுகின்றது.இனவாதத் தூண்டுதல் கட்டுக்கடங்காமல் செல்கின்றது.சிருபான்மையினத்த்திற்கு எதிரான சதிவலைகள் பின்னப் படுகின்றது.

கடந்த வாரம் ஒரு வீடியோ பார்க்கக் கிடைத்தது.பசிக்கொடுமை தாங்க முடியாமல் தென்னை மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஒருவர் ஈடுபட முயற்சிக்கும்போது  போலீஸ் அதிகாரியால் காப்பாற்றப் படும் அவலத்தை பார்த்தேன் .

ஏன் தற்கொலை  முயற்சி என்று போலீஸ் அதிகாரி கேட்கும்போது பசி தாங்க முடியாமல் இருக்கிறேன்.அரசாங்கத்தால் கொடுக்கின்ற நிவாரணப் பொருட்கள் குறிப்பிட்ட சிலரையே போய்ச் சேருகின்றது.எங்களைப்போன்ற ஏழைகளுக்கு கிடைப்பதில்லை .என்று அழுகையோடு கூறுகின்றார் அந்த மனிதர்.பரிதாபப்பட்டு  போலீஸ் அதிகாரி அவருக்கு தேவையான அத்யாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றார்.

இந்தப் பரிதாபம் குறிப்பிட்ட நபருக்கு மாத்திரம் இல்லை ,இவரைப் போன்று நாட்டில்  பல உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.வெளியில் சொல்ல முடியாதவர்கள் பலர் உண்டு. ஒரு சிலர் சிலவை குறைக்க வேண்டி நோன்பு பிடிக்கின்றார்கள் 

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பரிதாபங்களை சமாளிப்பது?

பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மக்களை பசியில் கொன்று குவிக்கும் கொடூரம் இலங்கையை தவிர வேறு எங்கும் இருக்க முடியாது 

பக்கத்து நாடுகளுடன் பகை ,அரபு நாடுகளுடன் பகை ,ஐரோப்பிய நாடுகளுடன் முறுகல் ,அமெரிக்காவுடன் பகை அத்தனையையும் விட ,சொந்த நாட்டு மக்களுடன் பகை,

பெரும் பான்மையின மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் ,அதே மக்களால் விரட்டியடிக்கப்படுவோம் என்று ஆளும் கட்சியிளிருப்பவர்களே அச்சம் தெரிவிக்கின்றனர். 

சதித் திட்டங்களை விட வேறு எந்தவித பயனுள்ள திட்டங்களும் இல்லாத ஒரு அரசாங்கமாகிவிட்டது இலங்கை அரசு.
தமது அரசாங்கம்  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் தோல்வி அடைந்து விட்டதை ஜனாதிபதியே ஒத்துக்கொண்டுள்ளார் 

இந்நிலைமை தொடர்ந்தாள் நாடு மிகவும் மோசமான காலகட்டத்தை சந்திக்க வேண்டி வரும்.

அத்தோடு உள்நாட்டு உற்பத்தி பாரிய  வீழ்ச்சியை கண்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3 சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக  அறிக்கைகள் தெரிவிக்கின்றன..

2019ம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் பதிவான வளர்ச்சி வீதத்தின் 1.1 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியை நாடு சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1.1 சதவீதத்துடன் நேரான வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 16.3 சதவீத மறையான வளர்ச்சியென மதிப்பிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

2020ம் ஆண்டின் 2வது காலாண்டில் நிலையான விலையில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,936,273 மில்லியனாக குறைந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019ம் ஆண்டு இதே காலப் பகுதியில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,312,078 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டில் 2வது காலாண்டில் நடப்பு விலையில் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,012,013 மில்லியனாக குறைந்துள்ளதுடன், 2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3,589,246 மில்லியனாக பதிவாகியுள்ளது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் நடப்பு விலை 16.1 சதவீத வீழ்ச்சி என அறிக்கைகள்  குறிப்பிடுகின்றது.

இலங்கை வரலாற்றில் இதுவரை இவ்வாறானதொரு வீழச்சி பதிவாகவில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர் 

இந்த இக்கட்டான சூழலைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அரசுக்குத் தேவையான கடனுதவி செய்துவிட்டு, தனக்குத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது. 

சீனாவுடனான கடன் சுமையை இலங்கை அரசு எப்படி சமாளிக்கப் போகின்றது என்ற கேள்வி  எழத்தான் செய்கின்றது  

நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

திட்டமிடப்படாத பொருளாதாரக் கொள்கையால் உள்நாட்டு உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன..இந்நிலை தொடருமானால் எதிர் வரும் நாட்கள் மிகவும் மோசமானத அமையும் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.





Post a Comment

0 Comments