கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் கழுத்துவலி, முதுகுவலி மற்றும் கண் பிரச்சனைகளை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளும் கம்ப்யூட்டர் முன்பு அமர வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், அவர்களும் இத்தகைய பிர்ச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். நேராக உட்காராமல் இருப்பது, உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் இந்தப் பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், பெற்றோர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, இந்தப் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
டெஸ்க் பொஷிஷன் : பள்ளியில் இருப்பதுபோன்று வீட்டிலும் டெஸ்க்கின் நிலையை உங்கள் குழந்தைகளுக்கு அமைத்துக்கொடுங்கள். கம்ப்யூட்டர் முன்பு சாய்ந்து கொண்டு அல்லது படுத்துக்கொண்டு இருப்பதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் முறையாக அமர வேண்டும் என்பதை கண்டிப்புடன் அறிவுறுத்துங்கள். டெஸ்கில் அமர்ந்திருக்கும்போது, குழந்தைகளின் பாதம் தரையில் படாதாவாறு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 8 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் உடலுக்கு ஏற்ப டெஸ்கை அமைத்து கொடுப்பது நல்லது.
இடைவெளியில் உடற்பயிற்சி : நீண்ட நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்துகொண்டு இருப்பதால், கை, கால் மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வலி ஏற்படுவது இயல்பு. இதனால், ஆன்லைன் வகுப்புகளின்போது கொடுக்கப்படும் இடைவெளிகளில் கை, கால்களை நீட்டி மடக்குதல் உள்ளிட்ட சிறு சிறு அசைவுகளை மேற்கொள்ளும்போது, தசை பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் கிடைக்கும். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் குழந்தைகள் அடிக்கடி இடைவெளி எடுத்துக்கொண்டால் இன்னும் சிறப்பு. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இடுப்புக்கு சப்போர்ட் : அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது, கீழ் இடுப்பு பகுதி மற்றும் தசைகளுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால், இடுப்பு பகுதிகளில் வலி ஏற்பட்டு குழந்தைகள் சாய்ந்து அல்லது தவறான நிலைகளில் அமருகின்றனர். இப்படி அமருவது குழந்தைகளின் இடுப்புக்கு மேலும் வலியை ஏற்படுத்தும். பெற்றோர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு, கம்பயூட்டர் முன்பு குழந்தைகள் அமரும்போது, இடுப்பு பகுதிகளை தலையனைகளை சப்போர்டிவ்வாக வைக்க வேண்டும். தற்போது, அவர்கள் முன்பு சந்தித்த அசௌகரியங்கள் இருக்காது.
ஆரோக்கியமான உணவை பரிமாறவும் : கடைசியாக, வளர்ந்து வரும் வயதிற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் குழந்தைக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி 12 மற்றும் டி ஆகியவற்றின் வளமான மூலத்தைக் கொண்ட ஒரு முழுமையான, ஆரோக்கியமான உணவு தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும், மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்து மோசமான தோரணை பழக்கங்களின் மோசமான விளைவுகளை எதிர்த்துப் போராடக்கூடும்.
ஆரோக்கியமான உணவு : வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு நாள்தோறும் கொடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவில் இருக்கும் கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி 12 மற்றும் டி, ஆகியவைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் தசைபிடிப்பு, கால்வலி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும்.
நன்றி;NEWS18
Tags:
கட்டுரை