"சந்திரயான்-3 (Chandrayaan-3) மிஷன் நிலவின் தென்துருவதில் தரையிறங்கியுள்ளது.
விக்ரம் லேண்டர் (Vikram Lander) மூலம் எடுத்துச்செல்லப்பட்ட பிரக்யான் ரோவர் (Pragyan Rover) நிலவின் மேற்பரப்பில் அதன் ஆராய்ச்சியை துவங்கியுள்ளது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியே இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளை வியப்படைய செய்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளே எதிர்பார்க்காத மர்ம முடிச்சை பிரக்யான் ரோவரின் முதற்கட்ட ஆராய்ச்சி கட்டவிழ்த்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? நிலவின் (Moon) மேற்பரப்பில் தரையிறங்கி பிரக்யான் ரோவர், லேண்டரை சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறது. நிலவின் மேற்பப்பில் உள்ள வெப்பநிலையை முதற்கட்ட ஆராச்சியாக ஆராய துவங்கியுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலைக்கும், நிலவில் அடிப்பகுதியில் உள்ள வெப்பநிலைக்கு ஏகபோக மாற்றங்கள் இருப்பதாக முதற்கட்ட ஆராய்ச்சி தகவல் வெளிப்படுத்தியுள்ளது. நிலவின் அடிப்பகுதி என்றதும் பல மீட்டர் ஆழத்தில் என்று நினைத்துவிடாதீர்கள். ரோவர் நிலவின் மேற்பரப்பில் இருந்து இப்போது வரை வெறும் 8 சென்டிமீட்டர் (8cm) மட்டுமே ஆராய்ந்துள்ளது.சந்திரா சர்பேஸ் தெர்மோபிசிக்ஸ் எக்ஸ்பெரிமெண்ட் (ChaSTE) என்ற ஆராய்ச்சியின் மூலம் நிலவில் உள்ள தென் பகுதில் சிவசக்தி பகுதியில் உள்ள நிலப்பரப்பில் வெறும் 10 சென்டிமீட்டர் ஆழம் (10cm depth) கொண்ட ஆய்வை இஸ்ரோ துவங்கி நடத்தி வருகிறது.
நிலவின் மேற்பரப்பில் 50 டிகிரி முதல் 55 டிகிரி வரை வெப்பம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. படிப்படியாக ஆழமாக செல்லும் பொழுது, நிலவின் வெப்பம் மாறுபடுவதை இஸ்ரோ கண்டறிந்துள்ளது.
8 சென்டிமீட்டர் ஆழத்தில் நிலவின் வெப்பம் -60 டிகிரியாக பதிவாகியுள்ளது. இது மேற்பப்பிற்கும் நிலவின் அடிப்பகுதியில் 8 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட வெப்பநிலை மாற்றங்களாகும். வெறும் 8 சென்டிமீட்டர் ஆழத்தில் இத்தகைய வெப்ப வேறுபாட்டை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.
முதல் முறையாக இத்தகைய வெப்ப மாறுபாடு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், நிலவின் இந்த வெப்பம் பல புதிய மர்மங்களை கட்டவிழ்க்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, இத்தகைய வெப்ப வேறுபாட்டை கண்டறிந்ததில் இந்தியா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென்று இஸ்ரோ அதிகாரி கூறியுள்ளார். காரணம், இத்தகைய வெப்பத்தில் இன்னும் ஏரளமான புதிய விஷயங்களை நாம் கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.குறிப்பாக, ஆவியாக கூடிய பொருட்கள் நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது நீர் என்ற ஒற்றை பொருளை தாண்டி வேறு சில பொருட்களை அடக்கிய பொக்கிஷயமாக கூட இருக்கலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த ஆராய்ச்சி 10 சென்டிமீட்டர் ஆழம் வரை சென்று அந்த வெப்பத்தின் அளவையும் கணக்கிடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.இப்போது இந்த ஆராய்ச்சி 10 சென்டிமீட்டர் ஆழத்தையும் தொட்டுவிட்டது.
இறுதியில் இஸ்ரோ வெளியிட்ட தகவலின் படி, 10 சென்டிமீட்டர் ஆழத்தில் நிலவின் வெப்பம் -10 டிகிரியாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 10 சென்டிமீட்டர் ஆழத்தில் இத்தகைய மாற்றத்தை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கவில்லை என்றும், இது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பையே மிஞ்சிவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் லேண்டர் மற்றும் ரோவரில் மொத்தம் 7 விதமான ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 7 ஆராய்ச்சி கருவிகளையும் இஸ்ரோ 14 நாட்களுக்கும் பயன்படுத்தி, நிலவின் மர்மங்களை கட்டவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இஸ்ரோவின் இந்த நிலவு ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை இஸ்ரோ ஒவ்வொன்றாக வெளியிடும் என்று கூறியுள்ளது.
Source:tamilgizbot
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இந்தியா