அதீத சத்துக்களைக் கொண்ட வேர்க்கடலை

அதீத சத்துக்களைக் கொண்ட வேர்க்கடலை

மிகச் சிறந்த உணவாகவும், ஏழைகளின் முந்திரியாகவும் இருக்கும் வேர்க்கடலை அதீத சத்துக்களை கொண்டதாகும். நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வேர்க்கடலையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம் வேர்க்கடலையை ஊற வைத்து சாப்பிட்டால் அதிக ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

வேர்க்கடலையை எப்பொழுது சாப்பிடலாம்?
புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட பல சத்துக்கள் இருக்கும் வேர்க்கடலையை ஊற வைத்த பின்பே இந்த சத்துக்கள் இன்னும் அதிகமாகும்.

ஒரு கைப்பிடி வேர்க்கடலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.



புரோட்டின், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை வேர்க்கடலையினை சீரான முறையில் சாப்பிடுவது நல்லது.


ஆனால் வேர்கடலையில் அதிக கலோரிகள் உள்ளதால், அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.



Post a Comment

Previous Post Next Post