ஞானசார தேரரும் இலங்கை முஸ்லிம்களும்

ஞானசார தேரரும் இலங்கை முஸ்லிம்களும்

இலங்கையில் தற்போது புதிது புதிதாக சில ரகசியத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, 

அதிலும் சிறுபான்மை மக்களின் சமையலறையில் என்ன நடக்கின்றது ,பெட்ரூமில் என்ன நடக்கின்றது ,மத வழிபாடுகளில் என்ன நடக்கின்றது ,சரியாகச் செய்கின்றார்களா பிழையாக செய்கின்றார்களா ?..இப்படிப் பல விடயங்களில் மூக்கை நுளைக்கின்றார் இலங்கை அரசாங்கத்தின் ரகசியப் படையின் தலைவர்  ஞானசார தேரர் .

இலங்கை போலீசாருக்கு கிடைக்காத ரகசிய தகவல்கள் இந்த ஞானசார தேரருக்கு மட்டும் எவ்வாறு கிடைக்கின்றது? .இவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்ற பல தலைவர்கள் கத்தியும் பயனற்றதாயிருக்கின்றது 

இவர் ஏற்கனவே பல விடயங்களில் தலையிட்டு தோல்வியை சந்தித்து மூக்குடை பட்டு முடியாத பட்சத்தில் கலவரங்களை தூண்டி விட்டவர் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 

அதே பாணியில் மீண்டும் நாட்டில் ஒரு பெரிய கலவரத்திற்கு அடிக்கல் நாட்ட முனைகின்றார் .

முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் ,அல்லஹ்வின் கட்டளைகள்தான் அந்நியர்களை கொலை செய்யத் தூண்டுகின்றது,ஆகவே குர்ஆனை தடை செய்ய வேண்டும் போன்ற சில அருவருப்பான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிகளை உசுப்பி விடுகின்றார்.

அதன் முதற்  கட்டமாக ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதல் மீண்டும் இலங்கையி நடக்கும் என்ற பரபரப்பான கருத்தை முன் வைத்தார்.அனைத்து முஸ்லிம்களும் ஐ எஸ் ஐயின் கொள்கையில் ஊரிப்போனவர்கல்தான்,ஆகவே மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்  என்று அமைச்சர் சரத் வீரசேகராவும் ஞானசாராவின் கருத்துக்கு ஒப்புதல் அளித்து சிறுபான்மை இனத்தை பதட்டத்தில் வாழும் ஒரு சூழலைஉருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஞானசார தேரரின் இனவாதப் போக்கால் நாட்டுக்கு மிகப் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.ஒவ்வொரு கலவரமும் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிப்பு அடையச் செய்துள்ளது.

அப்படியிருந்தும் அவர் கைது செய்யப்படவில்லை .மீண்டும் சுதந்திரமாய் செயல்படுகின்றார்.

மீண்டும் ஞானசார தேரர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார் .

முஹம்மத் ரசூல் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ,வஹாபி முஸ்லிம்களால் ,சூபி முஸ்லிகளுக்கு ஆபத்து என்ற ஒரு மிகப்பெரிய புரளியை கிளப்பிவிட்டுள்ளார்.

இந்த ஞானசார தேரர் முதலில் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம் .

இந்த சூபி ,வஹாபி போன்ற இயக்கங்கள் இஸ்லாத்தில் இல்லை என்பதே உண்மை.

இந்த இயக்கங்கள் அவரவர் வசதிக்காக ஆரம்பிக்கப் பட்டதேயன்றி இதில் இஸ்லாத்திற்கு எந்தவித சம்பந்தமுமில்லை .குர்ஆனில் இவர்களைப்பற்றி இல்லை ஹதீஸில் இவர்களைப் பற்றி இல்லை .

ஞானசார தேரரின் கொள்கைகள் எப்படி பெளத்த  மத போதனைகளில் இல்லையோ அப்படித்தான் இந்த இயக்கங்களும்.இவர்களின் கொள்கைகளும் குர்ஆனில் இல்லை. 

ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டங்கலுக்கு தடை விதித்துள்ள இஸ்லாம் ,நபிகள் பெருமானின் பிறந்த நாளை கொண்டாட ஒருபோதும் அனுமதித்ததில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அனுமதிக்கவில்லை .உலக மக்களுக்கு முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் பெயரால் இப்படிப்பட்ட கொண்டாட்டங்களை எதிர்க்கும் ஒருசில இயக்கங்களுக்கும் ,ஆதரிக்கும் இயக்கங்களுக்கும் இடையே ஒரு முறுகலை உருவாக்கி முஸ்லிகளிடையே பிளவை உண்டாக்கும் தீவிர முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார் இந்த ஞானசார தேரர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ..இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிந்தும் தெரியாததைப்போன்று நடிப்பதுதான் 
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். தினமும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் ஏற்றம்,இலங்கையை பகுதி பகுதியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது.பாதுகாப்பு இல்லை போன்ற இன்னும் பல விடயங்களைப்பற்றி மக்களை
சிந்திக்க விடாமல் செய்வதற்கான ஒரு தந்திரம்தாம் ஞானசாராவின் அறிவித்தல்கள் என்றும் மக்களிடையே ஒரு பரவலான கருத்தும் நிலவுகின்றது 

அசாத் சாலியை காரணமில்லாமல் சிறையில் அடித்துள்ளார்கள் .கவிதை எழுதியவரை கைது செய்துள்ளார்கள் ,காரணமேயில்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை கைது செய்து விடுதலை செய்துள்ளார்கள்,

ரிசாத் பதுதீனின் குடும்பத்தை காரணமில்லாமல் கைதுசெய்து அவமானப் படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள். ஆனால் இம்முறை பெரும்பான்மை இன மக்கள் புரிந்துகொண்டார்கள்.இனத்தின் பெயரால் இலங்கையை அளிக்க முற்படும் இந்த அரசாங்கத்தின் இழி செயல்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை .

இவ்வளவு சம்பவங்கள் நடந்தாலும் ஞானசார  என்ற ஒருவரை சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கின்றது. 

இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும்போது அதை மறக்கடிப்பதட்காக ஒரு கலவரத்தை தூண்டிவிடுவது இலங்கைக்கு புதிதல்ல .அதற்கான தீவிர முயற்சியில் ஞானசாரவும் ,அவரை அரவணைத்துச் செல்லும் அரசும் ஈடுபட்டுள்ளன என்பதுதான் உண்மை 

இலங்கையில் சிறுபான்மை மக்கள் ஞானசார சொல்கின்றபடிதான் வாழவேண்டும்,அவர்தான் இனி சிறுபான்மை மக்களின் வழிகாட்டி,சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிப்பார் அவற்றையெல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் .அவர்தான் எல்லாவற்றையும் பாதுகாப்பார் .என்ற ஒரு மாயையை உருவாக்க முனைகின்றார்.இந்த ஞானசார தேரர் .

கடந்த சில வாரங்களாக ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க ஞானசார தேரர் சென்றுள்ளார். அது ஒரு மவ்லவி ஒருவரின் மகளின் குடும்ப விவகாரம் என்பதால் அதை உலக மக்களுக்கு expose பண்ணி முஸ்லிம் மவ்லவி மார்கள் இப்படித்தான் என்று காட்டவேண்டும் என்பதற்காக சில tv நிருபர்களையும்  கூடவே அழைத்துச் சென்றுள்ளார்  .

இவற்றையெல்லாம் அவதானிக்கும் பொது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகின்றது.
எமது முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களின் தயவை மட்டுமே எதிர்பார்க்கின்றார்கள் என்பது தெளிவாகப் புரிகின்றது.
ஒரு சாதாரண பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக்க முனையும் நாம் ஏன் ஊர்ப் பெரியவர்களின் மூலம் இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க முனைவதில்லை?.

ஊரில் படித்தவர்கள் ,மார்க்க அறிஞர்கள் ,பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள்  இருக்கும்போது ஒரு சாதாரண பிரச்சினையை ,ஞானசார தேரர் மூலம் தீர்க்க முனைவது எந்த விதத்தில் நியாயம்?

இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு எமது அரசியல்வாதிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.தேர்தல் நெருங்கும்போது வாக்குகளை சேகரிப்பதற்காக மட்டுமே மக்கள் முன் வாக்குறுதிகளை அள்ளி வீசும் எமது அரசியல்வாதிகள் ,பாராளு மன்றம் சென்றவுடன் அத்தனையையும் மறந்து விடுகின்றார்கள்.

ஒற்றுமையில்லை .சூபியும் வஹாபியும் என்று ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றார்களேயன்றி மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாயில்லை.

முதலில் எமது அரசியல்வாதிகள் இஸ்லாத்தைப்பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும்.சூபியும் ,வஹாபியும் இஸ்லாத்தில் இல்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .மக்களின் பிரச்சினைகளை புரிந்து ,அதன்படி நடந்துகொள்ளவேண்டும் .

எமது அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசவேண்டும் .தொடர்ந்தும் அமைதிகாப்பதால் மக்களின் ஆதரவை இழக்கவேண்டிய நிலை உருவாகும்.

இயக்கங்களை மறந்து ஒன்று படுங்கள் .உங்களை ஆதரிக்க மக்கள் காத்துகொண்டிருக்கின்றார்கள் . 





  

Post a Comment

Previous Post Next Post