பாகிஸ்தானை சேர்ந்த 28 வயதான இளைஞன், போலாந்து நாட்டை சேர்ந்த 83 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஹபீஸ் முகமது நடீம் (28) என்ற இளைஞரும், ப்ரோமா (83) என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பானார்கள். இருவருக்கும் 55 வயது வித்தியாசம் உள்ள நிலையில் இந்த நட்பானது காதலாக மாறியது.
இந்த ஆறு ஆண்டில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். இருவருக்குமே தங்களின் தாய் மொழி மட்டுமே தெரிந்த நிலையில் ஆங்கிலம் பேச தெரியாது. இதையடுத்து மொழிபெயர்ப்பு செயலி மூலமே இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டனர்.


0 Comments