Ticker

6/recent/ticker-posts

“இஸ்லாமியர்களின் தொழுகைக்கு குருத்வாராவில் இடம் அளித்த சீக்கியர்கள்” : ஹரியானாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் இஸ்லாமிய மக்களைத் தொழுகை நடத்த விடாமல் இந்துத்வா கும்பல் தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறது. மேலும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக 106 இடங்கள் இருந்தது. ஆனால் திடீரென குருகிராம் நகராட்சி நிர்வாகம் 37 இடங்களில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்துக்கள் பலரும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு தங்களின் இடங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளனர். அந்த இடங்களில் இஸ்லாமியர்கள் தங்களின் தொழுகைகளை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கூறிய ஷெர்தில் சிங் சந்து, “இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு தங்களின் ஐந்து குருத்வாராக்களின் வளாகத்தைப் பயன்படுத்தலாம். எல்லா மதங்களும் எங்களுக்கு ஒன்றுதான். மனித நேயம் மற்றும் மனித விழுமியங்கள் மீது நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் மத வழிபாட்டில் தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்த நினைத்த இந்துத்வா கும்பலுக்குச் சீக்கிய அமைப்புள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் இவர்களின் செயல்பாட்டை மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக இவர்களின் செயல்பாடு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இந்த நிகழ்வு எடுத்துகாட்டியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நன்றி;kalaignarseithigal

Post a Comment

0 Comments