எனது மகனுக்கு 16 வயது. அவன் கடந்த 3 வருடங்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். பாடசாலைக்குச் செல்வதிலும் படிப்பிலும் அக்கறை காட்டுவதில்லை . அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ஏனைய மாணவர்களைப் போல் சகலதையும் சாப்பிட முடியாமல் இருப்பது போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனது கணவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்நோய் உள்ளது. மகனுக்கு காலையும் மாலையும் இன்சுலின் போடுகிறோம். இது ஒரு குடும்ப நோயா? இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு யுனானி மருத்துவ அறிவுரைகளையும் தரவும்.
பேகம், கொழும்பு 15

பதில்: நீரிழிவு நோய் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனித சமுதா யத்தை ஆக்கிரமித்துள்ள ஒரு நோயாகும். ஆனாலும் அண்மைக் காலம் வரையிலும் சிறுவர்களுக்கிடையே இந்நோய் மிக மிக அரிதாகவே காணப்பட்டது. இன்று சிறுவர்களுக்கிடையேயும் இந்நோய் பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவாக அவர்களது உடல் நலம் மாத்திரமின்றி கல்வி சிறுவர்களின் சந்தோஷமான சுதந்திரமான வாழ்க்கைக்கு தடையேற்படல் போன்றவைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தி எதிர்கால வாழ்க்கையையே சூன்யமாக்கி வருகிறது.
இந்நோய் சிறுவர்களுக்கிடையே அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் உளவி யலில் ஏற்பட்ட மாற்றமும் உடற்பயிற்சி இன்மையுமேயாகும்.
அண்மையில் 16 வயதுடைய சிறுமியொருவருக்கு அதிகளவு சிறுநீர் போவதாக என்னிடம் வந்த போது நான் குருதியில் சீனியின் அளவைப் பார்த்த போது மிக மிக அதிகமாக காணப்பட்டது.
இச்சிறுமியின் குடும்பத்திலும் யாரும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் இல்லை . ஆனால் இச்சிறுமியின் தாய் கூறிய ஒரு அதிர்ச்சியான தகவல் தான் இச்சிறுமிக்கு தினமும் முன்று வேளையும் சாப்பிடும் போது மென்பானம் எடுப்பது என்பதாகும். எனவே இச்சிறுமியின் நீரிழிவு நோய்க்கு இரசாயனப் பொருட்களடங்கிய மென்பானங்கள் தான் காரணமென ஊகிக்க வேண்டியிருந்தது.
நாம் எமது பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடிய உணவு வகைகளைப் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
எமது முன்னைய சமூகத்திலிருந்த தாய்மார்கள் பிள்ளை கிடைத்த நாளிலிருந்தே தாய்ப்பாலைத்தான் கொடுத்தார்கள். சில வேளைகளில் தாய் மரணமடைந்தால் செயற்கைப்பாலுக்குப் பதிலாக செவிலித்தாய் மூலம் பாலூட்டியதை நாம் இன்று கதைகளாகக் கூறுகிறோம்.
இதற்கு மாறாக இன்று தாய்மார்கள் உயிருடன் தேகாரோக்கியமாக இருந்தும் தாய்ப்பாலைக் கொடுக்காமல் செயற்கைப் பாலையே கொடுக்கிறார்கள். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டக் கூடிய பதார்த்தமும் இருப்பதனால் பல வகையான நோய்களுக்கு தாய்ப்பால் ஒரு தடுப்பு மருந்தா கவே உள்ளது.
அத்துடன் தாய்ப்பாலில் இருக்கக் கூடிய இனிப்புத் தன்மையும் சிறுவர்களின் தேவைக்கேற்ப இருக்கின்றதே தவிர அதிகமாக இல்லை . இதற்கு மாறாக செயற்கைப்பாலைக் கொடுக்கும் போது அதிகளவு சீனியைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் சிறார்களின் நாவை அதிகளவு இனிப்புச் சுவையை உணரக் கொடுப்பதன் மூலம் சிறார்களின் நாவை அதிகளவு இனிப்புச் சுவையை உணர் வதற்கே பழக்குகின்றோம்.
சிலவேளை தாய்மார்கள் நோய்வாய்ப்படும் போது தாய்ப்பால் கொடுக்காமல் செயற்கைப் பாலைக் கொடுத்து விட்டு நோய் நீங்கியவுடன் மீண்டும் தாய்ப்பாலுக்கு மாற்றிவிடுவோம் என எண்ணி செயற்கைப்பாலைக் கொடுக்கிறார்கள்.
ஆனால் மீண்டும் தாய்ப்பாலைக் கொடுக்கும் போது பிள்ளைகள் தாய்ப் பாலைக் குடிப்பதில்லை எனப் பின்பு புகார் செய்கிறார்கள். இதற்குக் காரணம் செயற்கைப் பாலைக் கொடுக்கும் போது அதிகளவு சீனியுடன் கொடுப்பதும், கூடிய விரைவில் பாலைக் கொடுப்பதற் காகப்பாலை உறிஞ்சக் கூடிய சூப்பியின் துவாரத்தை பெரிதாக்கியும் கொடுப்பதனால் மீண்டும் மார்பகத்திலிருந்து பாலை உறிஞ்சுவதில் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியமும் ஆகும்.
அத்துடன் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதையடைந்ததும் தாய்ப்பாலுக்குப் புறம்பாக ஏனைய உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கும் போது இயற்கை உணவுகளுக்குப் பதிலாக இனிப்புத் தன்மை கூடிய அதிசுவை கூடிய வியா பார நோக்கத்திற்காகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கிக் கொடுப்பதிலேயே தாய்மார்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக தொடர்ந்தும் இனிப்புக் கூடிய உணவு வகைகள் கொடுக்கும் போது உடற்பருமன் அதிகரிப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
மேலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவர்களுடைய காலைச் சாப்பாடு கோதுமை மாவை அடிப்படையாக வைத்துத் தயாரித்த உண வுகளையே கொடுக்கின்றோம். தனது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக முன்னைய தாய்மார் களின் தியாகங்களையும், அனுபவித்த கஷ்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய தாய்மார்களின் தியாகம் என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது.இவைகளின் இறுதி விளைவுதான் இளம் வயதிலேயே நீரிழிவு, அதிக குருதி அழுத்தம், அதி உடற்பருமன் போன்ற மீள முடியாத நோய்களின் தோற்றமாகும்.
எனவே உங்களது பிள்ளைகளின் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தானிய வகைகள், மரக்கறி வகைகள், பழ வகைகள் போன்ற வற்றையும் அன்றாட உணவில் சேர்ப்பது மிக மிக முக்கியமாகும். இதை நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்டவர்களும் வைத்தியர்களின் ஆலோசனைப்படி பின்பற்றி றலாம்.
அத்துடன் நீரிழிவு நோயினால் பீடிக்கப்பட்ட சிறார்களை விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்த வேண்டும். உடற்பயிற்சியின் போது உடம்பின் சீனியின் அளவு குறைகின்றன. இன்று நாம் பிள்ளைகளை விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவதிலும் கவனக் குறைவாக உள்ளோம் என்பதே உண்மை .
சிறுவயதிலேயே நீரிழிவு நோய் ஏற்பட்டால் அதன் மூலம் இருதயம், சிறு 'நீரகம், மூளை, நரம்பு போன்ற உடல் உறுப்புக்களுக்கு இளம் வயதிலேயே பாதிப்புகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இங்கு கேள்வி அனுப்பியிருக்கும் சகோதரி தனது கணவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்நோய் இருப்பதன் காரணமாக இந்நோய் தனது மகனுக்கும் ஏற்பட்டுள்ளதா என வினவியுள்ளார். அவ்வாறான சாத்தியக் கூறுகள் இருந்தாலும் கூட உணவு, உடற்பயிற்சி போன்றவைகளில் மிகவும் அவதானமாக இருந்தால் இந்நோய் வராமல் அல்லது வருவதைப் பின்போடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.
இறுதியாக வாசகர்களுக்கு அதாவது விஷேடமாக தாய்மார்களுக்கு ஒரு செய்தி. சிறுவயதிலிருந்தே அதிக மாவுத்தன்மையும் இனிப்புத் தன்மையுமுடைய உணவு வகைகளை அதிகளவு கொடுத்து உங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை கசப்பாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
DR.NASEEM
0 Comments