குர்ஆன் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்
தொழுகையை நேரத்துக்கு தொழுவதற்கு கற்றுக் கொடுங்கள்
கடமைகளை ஆழமாக விதைத்து விடுங்கள்
ஹராமான விடயங்களை எடுத்துக் கூறுங்கள்.
ஆண் பெண் ஆடைகளின் வரையறைகளை சிறு வயது முதல் சொல்லிக் கொடுங்கள்.
பெரும் பாவங்களை என்ன என்ற விடயத்தை சொல்லிக் கொடுங்கள்
பொறாமை கொள்ளக் கூடாது புறம் பேசக் கூடாது மமதை கொள்ளக் கூடாது தற்பெருமை கூடாது அகம்பாவம் கூடாது.ஆணவம் கூடாது என்ற விடயங்கள்
கொடிய பாவங்கள் என சொல்லிக் கொடுங்கள்.
தவறு செய்தால் மன்னிப்பு கேட்க கற்றுக் கொடுங்கள்
விட்டுக்கொடுப்பு மற்றவர்களை மன்னிப்பது நன்றி கூறுவது அனுமதி கேட்பது
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரியோரை மதித்து நடப்பது போன்ற நல்ல பழக்கங்களை சிறுவயதிலேயே விதைத்துக் கொள்ளுங்கள்
உண்மை மாத்திரமே பேசுவது போன்ற ஒழுக்க மாண்புகளை அழகாக சொல்லிக் கொடுங்கள்.
ஒழுக்கத்தையும் கல்வியையும் ஒன்றாக கற்றுக் கொடுங்கள்
பிள்ளைகளுக்கு அரச தொழிலை ஊக்குவிப்பை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்
கல்வியை கொடுக்கின்றேன் என்ற பெயரில் உலக வெறியை ஊட்டாதீர்கள்...
'பாடங்களில் 100 எடு என்று சொல்லி அனுப்புவதை விட பண்பாடுகளில் உயர்ந்து நில்' என்று பிள்ளைகளுக்கு புகட்டுங்கள்.
உங்கள் பிள்ளைகள் நன்றாக கற்கின்றார்களா என்ற விடயம்
அது அல்லாஹ்வின் அருள் என்பதை மறந்து விடாதீர்கள்.
அதற்காக அல்லாஹ்வுக்காக நன்றி கூறுங்கள்.
மாறாக அது அதிர்ஷ்டமும் அல்ல உங்கள் சாதனையும் அல்ல.
அதற்காக நீங்கள் பெருமை கொள்ளாதீர்கள்.
பிற பிள்ளைகளை ஏளமாகவும் பார்க்காதீர்கள்.
மற்றவர்களை இழிவு படுத்தினால் இறைவன் உங்களை கேவல படுத்துவான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால் நல்லொழுக்கமிக்க ஸாலிஹான தேசப்பற்று உள்ள பிள்ளைகளை உருவாக்குங்கள்.
இன்மையிலும் மறுமையிலும் நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள்
தனக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளைகளை விட்டுச் சென்ற பெற்றோர்கள் என்ற பாக்கியத்தை அடைந்து கொள்ளுங்கள்
சிந்திக்கும் ஆற்றலுள்ள சமூகத்தை உருவாக்குங்கள்
இந்த உருவாக்கம் ஒரு சமூகத்தை பாதுகாக்கும்


0 Comments