Ticker

6/recent/ticker-posts

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு ...! நடக்கப்போவதுஎன்ன?


இம்முறை வரவு செலவு திட்டத்தில் முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை  அறிவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

உண்மையில் நடக்கப்போவது என்ன ?

இம்முறை  வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான உர மானியம் சம்பந்தமாக  எந்தவித சலுகைகளுக்கும் வரவு செலவு திட்டத்தில்  நிதி ஒதுக்கப்படவில்லை.

சேனை பசலை  பயன்படுத்துவதில்  ஏற்படப்போகும்  அறுவடை குறைவிற்கு  நஷ்ட ஈடு  வழங்கப்படும் என முன்னர் அரசாங்கம் கூறியிருந்த போதும், அதற்கான இந்தவிதமான  நிதிகளும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கொடுக்கப்படவில்லை.

இதனால் எதிர்வரும் அறுவடை காலங்களில்  விவசாயிகள்  கணிசமானளவு வருமானத்தை இழப்பதோடு,தங்களின்  விவசாய  உற்பத்திகளுக்கு  கூடுதலான  உற்பத்தி செலவு அதிகரிப்பதனால்  சந்தையில்  பொருட்களை கூடுதலான  விலைக்கு விற்க வேண்டி ஏற்படும். இதனால்  பாரிய அசவ்கரியங்களை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.

இதேவேளை முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும்,
விவசாயத்தை நம்பி வாழும் மக்களின்  பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் சென்றுள்ளனர்.  ஆக தம் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களாக இருந்தால்  இவர்களே  இம்முறை வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் விமர்சிக்க வேண்டும்.  தம்மக்களுக்கு  வரும் காலங்களில்  இதனால்  ஏற்படப்போகும்  கஷ்டங்களையும் நஷ்டங்களையும்  பாராளுமன்றத்தில்  எடுத்துரைத்து  அரசிக்கு  இதை தெளிவு படுத்தி, தமது மக்களுக்காக பேசி இருக்க வேண்டும்.  ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

முஸ்லிம் கட்சிகளின  அங்கத்தவர்களின்  அறிக்கைகளை உற்று நோக்கும்போது வழமையாக முஸ்லீம் சமூகத்தை ஏமாற்றும் வழிமுறையையே இம்முறையும்  இவர்கள் கை கொள்வார்கள் போல் தெரிகிறது.
ஒரு தலைவர் எதிர்த்து வாக்களிப்பார்.  அவரின் சகாக்ள்,  தேர்தல் காலங்களில் மொட்டும் ஹராம். ஹராத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் என, மக்களை ஏமாற்றி, மொட்டின் சுவையை அனுபவிப்பவர்களுக்கு  மொட்டு  ஹலால் ஆகிவிடும். 

சாணக்கிய தலைவர் அனைத்து ஏற்பாடுகளையும்  செய்து கொடுத்து விட்டு எழுந்து சென்று விடுவார். அரசுக்கு விசுவாசமாகவும், மக்களிடம் வசுவாசமாகவும், சாணக்கியமாகவும்  நடந்து கொள்வார். அவரின் சகாக்கள்  ஆதரவாக  வாக்களிப்பார்கள்.  இறுதியில்  கட்சியின் முடிவை மீறி விட்டார்கள்  என  பின்பு மக்களுக்கு அறிக்கை விடுவார்.  அத்தோடு  இரண்டு மாதங்களின் பின்  அவர்களை உயர்பீடம்  மன்னித்து விடும்.  இதுவே  20க்கு ஆதரவழித்த இவர்களின் நடவடிக்கைகளை  எதிர்பார்த்து நிற்கும்  மக்களுக்கு, இவை தான் வழைமையான பல்லவியாக கிடைக்கப்போகும்  பதிலாகுமா ?



Post a Comment

0 Comments