மோர் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது எம்மில் பலருக்கு தெரிந்த விடயமே.
இன்று நாம் முடி வளர்ச்சிக்கு மோரை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
மோர்
கறிவேப்பிலை
ரோஸ் வாட்டர்
தயாரிப்பு
ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி புளித்த மோரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதோடு, ஐந்து அல்லது ஆறு கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் அடிப்பது போல் அடித்துக் கொள்ளவும்.
அந்தக் கலவை வடிகட்டி, அதில் மேலும் இரண்டு தேக்கரண்டி மோர் சேர்க்கவும்.
இறுதியாக அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் உங்களின் தலைமுடியை சிறிய பகுதிகளாக பிரித்து இந்தக் கலவையை உங்களின் உச்சந்தலையில் தடவி, 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து முடியை அப்படியே கட்டி விடுங்கள்.
பின்னர் 40 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசவும். மோர் மாசு, இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி உங்கள் உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறது.
இதில் உள்ள கறிவேப்பிலையில் முடி உதிர்தல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி விரைவான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது இறந்த முடியின் வேர்க்கால்களை அகற்றும் போது உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது.
வாரம் இரு முறை இதனை பயன்படுத்துவது உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
0 Comments