கால், இடுப்பு முள்ளந்தண்டு வலி

கால், இடுப்பு முள்ளந்தண்டு வலி

 கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக நான் கால், இடுப்புஇ முள்ளந்தண்டு வலியினால் அவதிப்படுகிறேன். நின்று கொண்டு அதிக நேரம் தொழிலில் ஈடுபடுவதும் இதற்கு காரணமாக இருக்கலாம். பல முறை வைத்தியம் செய்தும் பலனில்லை. எக்ஸ்ரே பரிசோதனையில் முள்ளந்தண்டு விலகியுள்ளதாக கூறினார்கள். இதற்கு தீர்வு என்ன? உணவு மற்றும் உடற்பயிற்சி பற்றிய ஆலோசனை தேவை.
எம்.கே.முஹம்மத், புத்தளம்


பதில்: கால், இடுப்பு, முள்ளந்தண்டு அடிப்பகுதி கடுப்பு என்ற இந்நிலை உடம்பில் பல உறுப்புகளுடன் தொடர் புடையது. இது ஏறக்குறைய 12 நோய் களின் அறிகுறியாக இருப்பதோடு இந்நிலை தொடர்ந்தும் சிகிச்சை யின்றி நீடித்தால் குணமாக்க முடியாத நிலைக்குச் செல்லும்.

இந்நோய்க்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் இறுதியில் நரம்புத் தொகு தியும் தசைத் தொகுதியுமே கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. 

எமது வீடுகளில் மின் தொடர்புக ளுக்காகப் பாவிக்கக் கூடிய வயர்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் பழுத டைந்தால் அல்லது பல தசாப்தங்களாகத் தொடர்ந்து பாவித்தால் வயர்கள் பலவீ னமடைந்து அவை மின் கசிவுகளையோ அல்லது மின்னைக் கடத்துவதில் தாமதத் தையோ ஏற்படுத்தலாம். இதே போன்று எமது முழு உடம்பிலும் வயர்களும் ஒத்ததான நரம்புகள் உள்ளன. வயர்களி னூடாக மின் கடத்தப்பட்டு மின் சாதனப் பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றதோ அதேபோன்று நரம்புகளினூடாகவும் மிகக் குறைந்த வலுவையுடைய மின் பாய்ச்சப்படுவதன் மூலம் எமது உடம்பு இயங்குகின்றது. இதில் ஏதாவது ஒரு காரணத்தினால் நரம்புகள் பாதிக்கப் பட்டால் நரம்புகளின் தொழிற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கடுப்பு, விறைப்பு, ஊசியினால் குத்துவது அல்லது திடீரென மின்பாய்வது போன்ற குறிகுணங்கள் ஏற்படும்.

இதுபோன்ற நோய் அறிகுறிகள் நோயாளிகளுக்குப் பாரிய அசௌகரி யத்தை ஏற்படுத்துவதோடு தமது அன் றாட வேலைகளுக்கும், நிம்மதியான தூக்கத்திற்கும் இடையூறு விளைவிக்கும். 

கடுப்பு ஏற்படுவதற்குப் பலகார ணங்கள் உள்ளன. விட்டமின்களின் குறைபாடு முதல், தொடர்ச்சியாக மதுபானம் அருந்துதல், புகைத்தல், சில மருந்துகளின் தாக்கம், நீரிழிவு நோயின் தாக்கம், சில தொற்று நோய்கள், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியினால் ஏற்படுகின்ற நோய்கள், முள்ளந்தண்டில் ஏற்படுகின்ற நோய்கள் உட்பட புற்று நோய் வரையிலான பல நோய்களினால் இந்நிலை ஏற்படலாம். மேற்குறிப்பிட் டுள்ள அனைத்து நோய்களின் போதும் இறுதியாகப் பாதிக்கப்படுவது நரம்பு களே. அத்துடன் ஒவ்வொரு நோயின் தன்மையைப் பொறுத்து கடுப்புடன் வேறு பல் நோய் அறிகுறிகளும் காணப் படும். இதில் முக்கியமாக நீரிழிவு, அதிக கொலஸ்ரோல், தொற்று நோய்கள், புற்றுநோய் போன்ற நோயுடைய வர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்,

எனவே ஒவ்வொரு நோய்க்கும் உரித் தான நோய் அறிகுறிகளைக் கேட்டறி வதன் மூலமும், பல இரத்தப் பரிசோ தனைகள் மூலமும், X Ray, CT Scan, MRI போன்ற பரிசோதகைள் மூலமுமே நோய் நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சையளிக்கப்பட வேண்டும். 

இந்நிலை தொடர்ந்தும் சிகிச்சையின்றி நீடித்தால் அது அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருப்பதோடு, தூக்க மின்மை மன அழுத்தம் உட்பட பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். 

உணவைப் பொறுத்தவரையில் அதிக உப்பு, மற்றும் மாப்பொருளடங்கிய உணவு வகைகளைத் தவிர்ப்பதோடு அதிகளவு மரக்கறி வகைகள், தானிய வகைகள், கீரை வகைகள் போன்ற வற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நோயின் தன்மைக்கு ஏற்ப விட்டமின்களையும் உட்கொள்ள வேண்டும்.


கடுப்பு என்ற இந்நோய் அறிகுறிக்கு சிகிச்சையளிக்கும் போது நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிப் பதன் மூலம் சிறந்த பலனைப் பெறலாம்.

நவீன வைத்தியத் துறையைப் பொறுத்த வரையில் கடுப்பினால் அவ ) திப்படுபவர்களுக்கு விட்டமின்களும் நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்தக் - கூடிய மாத்திரைகளுமே கொடுக்கப்ப டுகின்றன. ஒரு சிலருக்குப் பெளதீகச் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.

யூனானி வைத்தியத் துறையிலும் இதற் காகப் பல சிகிச்சை முறைகள் உள்ளன. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தக் கூடிய மூலிகைகளினால், தயாரிக்கப் பட்ட வெளிப்பூச்சு மருந்துகள், நரம்புக ளுக்குத் தேவையான இயற்கை மூலிகை களினால் தயாரிக்கப்பட்ட விட்டமின்கள் மற்றும் உட்கொள்வதற்கான பல மருந்து வகைகளும் உள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்துகளினால் செறிவூட்டப்பட்ட எண்ணை வகைகளைப் பிரயோகித்து மசாஜ் பண்ணுவதன் மூலமும் கூடிய பயனைப் பெறலாம்.

அத்துடன் தேகப்பயிற்சியும் சிகிச்சை யுடன் ஒன்றறக் கலந்த ஒரு முக்கியமான விடயமாகும். உடற்பயிற்சியின் போது பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு அவ்வுறுப்புக் களில் தேங்கி நிற்கும் கழிவுப் பொருட் களும் வெளியேற்றப்படுவதன் மூலம் அவ்வுறுப்புக்கள் புத்துயிர்ப்படைகின்றன. அத்துடன் உடற்பயிற்சியின் மூலம் குருதியில் குளுகோஸ், கொலஸ்ரோல் போன்றவைகளும் குறைவடைகின்றன.

இக்கேள்வி கேட்டிருப்பவருடைய கடுப்பு வருத்தத்திற்கு அவருடைய தொழில் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன். 

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது மேற்கூறிய கடுப்பு வருத்தம் உடையவர்கள் வாதம் அல்லது நரம்பு வாதம் என எண்ணி தகுந்த சிகிச்சை பெறாமல் இருப்பதால் பலருக்கு எதிர் விளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே இந்நிலை வராமல் தடுப்பதாயின் ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சையைப் பெறும்படி வேண்டுகிறேன்.

Post a Comment

Previous Post Next Post