
கோயம்புத்தூர் ,லங்கர் கானா, பூமார்கெட், கபரஸ்தான்,ஈத்கா பள்ளிவாசல் சார்பாக 27 -03 -2022 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பான வகையில், கல்வியை நோக்கி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கல்விச் சங்கமம் விழா இனிதே நடைபெற்றது.
விழாவிற்கு திப்புசுல்தான் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் திரு சௌக்கத் அலி அவர்கள் தலைமை தாங்கினார்.

தமிழக சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
திருக்குறள் பேராசிரியர், முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
முத்தவல்லி திரு அய்யூப் அவர்கள்,காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் திரு அழகு ஜெயபாலன் அவர்கள்.,வக்பு வாரிய உறுப்பினர் திரு.சையது அலி அக்பர் அவர்கள்., கோவை மாநகராட்சியின் துணை மேயர் திருமிகு வெற்றிச் செல்வன் அவர்கள்., வக்பு கண்காணிப்பாளர் திரு கலீல் அவர்கள்., வழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்கள்.,திரு கே.இஜட் ஜலாலுதீன் இம்தாதி அவர்கள்., பேராசிரியர் முனைவர் பஜலூர் ரஹ்மான் அவர்கள் ., பேராசிரியர் மாலிக் அவர்கள் மற்றும் ஜமாத்தாருடன், சான்றோர்கள் முன்னிலையில் மாணவ செல்வங்களுக்கான கல்வியை நோக்கி விழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து மாணவர்களுடன் நெறியாளர்கள் வழிகாட்டி கலந்துரையாடியாடினர்.
திப்புசுல்தான் பள்ளிவாசல் நிர்வாக கல்வி வழிகாட்டிக் குழுவின் செயல்மறவர்கள் விழாவினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
வேட்டை நிருபர்
தமிழ்நாடு
Vettai Email-vettai007@yahoo.com
0 Comments