75 வருடங்களுக்கு முன் கைத்தொலைபேசி உபயோகித்த பதினேழு வயது இளநங்கை!

75 வருடங்களுக்கு முன் கைத்தொலைபேசி உபயோகித்த பதினேழு வயது இளநங்கை!


Sim  கார்டோ chipபோ இல்லா நிலையில் 1938களில்  Mobile Phone  பாவனையில் இருந்து வந்துள்ளது.  இதற்கு ஆதாரமாக 75 வருடங்களுக்கு முன்னர் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள் கொள்ளப்படுகின்றன.

இப்படியானதொரு சாதனம் பற்றி அன்றைய மக்கள் சிந்தித்துக் கூட பார்க்கா நிலையிலும், உண்மை நிலையறிந்து உறுதிப்படுத்தப்படாத நிலையிலும்  இவ்வாறான படங்களின் தொகுப்பை “Time Traveler in 1938 film” என்ற தலைப்பில் இணையத்தளம் கடந்த பத்து வருடங்களுக்கு முன் பதிவிட்டிருந்தது!
அவ்வேளையில் youtube  பயனர் ஒருவர் வீடியோவில் mobile பேசிக்கொண்டிருக்கும் பெண் தனது முப்பாட்டி என்று உரிமை கோரியுள்ளதோடு, அந்த சந்தர்ப்பத்தில் தனது முப்பாட்டி நிஜக் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தியுள்ளதையும்  அவர் உறுதி செய்துள்ளார்!

அவ்வேளை அமெரிக்காவில் மசாட்சுசெட்ஸ்ஸின் லியோமின்ஸ்ட்டரில் அமைந்துள்ள “டுபொண்ட்”  தொலை தொடர்பு சாதனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தனது முப்பாட்டி பணிபுரிந்ததாகவும்,  பணியை முடித்து வீடு  திரும்பும்போதே இந்தக் காட்சிகள் பதிவாக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிடுகின்றார்!

இன்றைய பெண்கள் சாதாரணமாக கைத்தொலைபேசியில் உரையாடிக்கொண்டு  வீதியில் நடந்து செல்வது போன்றே அன்றும் அப்பெண் செல்வதைக் காணலாம். தொலைபேசியின் அளவும் நாம் இன்று உபயோகப்படுத்தும்  கைத்தொலைபேசி அளவை ஒத்ததாகவே  காட்சிகளில் இருப்பதைக் காணமுடிகின்றது.

மிக அண்மையில் Planetcheck என்ற பெயர் கொண்ட  “யூடியூப்” பயனர்  ஒருவர் இந்தப் படத்தொகுப்பின் உண்மைத் தன்மையைத் தனது இணையத் தளத்தில் வெளியிட்திருந்தார். இந்தப் படங்களில் உள்ள பெண் “கெர்ட்றூட் ஜோன்ஸ்” (Gertrude Jones) என்றும், இவர் தனது பட்டியின் அம்மா என்றும் குறிப்பிடும் அவர், இந்தக் காட்சிப்படங்கள் எடுக்கப்பட்டபோது தனது பட்டியின் அம்மாவுக்கு  வயது பதினேழு என்று தனது பாட்டி குறிப்பிடுவதாகக் கூறுகின்றார்!

அக்காலத்தில் அவர் “டுபொண்ட்” (Dupond) நிறுவனத்தின் தொலைதொடர்பு சாதனம் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றியுள்ளார். அந்தப் பிரிவில் இணைப்பற்ற தொலைபேசியினை  தயாரிப்பதற்கான  பரிசோதனை முயற்சிகள்  இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை, வயரிணைப்பற்ற தொலைபேசி  பரீட்சாத்த முயற்சியின் நிமித்தம் தனது முப்பாட்டி உட்பட  ஐந்து பெண்களுக்கு  ஒருவார காலத்துக்கு தொலைபேசிகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், ஒரு தினம் பணி நிறைவு பெற்று வீடு செல்லும் நிலையில், அவர் வீதியில் நடந்து கொண்டே தனது  நிறுவனத்து விஞ்ஞானி   ஒருவருடன் உரையடிக்கொண்டிருக்கும்போது   இக்காட்சிகள் எடுக்கப்பட்திருக்கலாம் என  "பிளானட்செக்கர்" கருத்து வெளியிட்டுள்ளதோடு, பின்னர் அப்பதிவு அகற்றப்பட்டுள்ளதாகவும்  அறிய முடிகின்றது!

வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  
-

Post a Comment

Previous Post Next Post