உலகில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
43 நாடுகளில் பட்டினியின் விளிம்பில் இருப்போர் எண்ணிக்கை 45 மில்லியனுக்கு உயர்ந்துள்ளதாக, ஐ.நா உணவு அமைப்பு கூறியது. ஓராண்டுக்கு முன்னர் பதிவான 42 மில்லியனைவிட இது அதிகம். ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மில்லியன் பேர் பட்டினியால் வாடுவது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உள்நாட்டுப் போர், பருவநிலை மாற்றம், கொவிட்-19 நோய்ப்பரவல் போன்றவற்றால் உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக உணவு அமைப்பு கூறியது.
உலகளாவிய பட்டினியை தவிர்ப்பதற்கு 7 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த நிதித் தேவை 6.6 பில்லியனாக இருந்தது.


0 Comments