Ticker

6/recent/ticker-posts

தொழில் நுட்பத்தால் அனைத்தையும் இழந்து விட்டோம்



இன்று தொழில் நுட்பம் மனித இனத்திற்கு எவ்வளவு அவசியமோ அதேபோன்று மனித வீழ்ச்சிக்கும் முக்கியமானதொன்றாகி விட்டது.

இன்டர்நெட் இல்லாத உலகம் நிம்மதியை தந்தது .

இன்டர்நெட் இல்லாத உலகம் உறவுகளை முகம் பார்த்து ஆரத் தழுவி ஆனந்தம் அடையச் செய்தது.

இன்டர்நெட் இல்லாத உலகம் உழைப்பின் மகிமையை உணரச் செய்தது.

இன்டர்நெட் இல்லாத உலகம் உடல் ஆரோக்கியத்தை தந்தது .

ஈமெயில் இல்லாத உலகத்தில் மாதக் கணக்கில் காத்திருந்து கடிதம் படிக்கும் மகிழ்ச்சி இருந்தது.

facebook இல்லாத உலகம் புத்தகங்கள் பத்திரிகைகள் படிக்கும் ஆர்வத்தை தந்தது.

facebook இல்லாத உலகத்தில் பத்திரிகைளுக்கு ஆக்கங்கள் எழுதி மாதக் கணக்கில் காத்திருந்து ,பிரசுரமாகும் போது கிடைக்கின்ற மகிழ்ச்சி இன்றைய facebook காலத்தில் கிடைப்பதில்லை  

whatsapp இல்லாத உலகம் உறவுகளை நேரடியாக சந்தித்து உரையாடும் அழகான நாட்களை தந்தது .

இன்டர்நெட் இல்லாத உலகத்தில் பிள்ளைகள் சுதந்திரமாய் நடமாட பாதுகாப்புச் சூழல் இருந்தது 

ஆனால் ...
தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் எதை சாதித்து விட்டோம் ? என்று நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகின்றது.

இன்று கொரோனவால் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றோம்  என்பது மட்டும் நிதர்சனமான உண்மை, 

இயற்கையை இழந்து விட்டோம் .
இனி வரும் காலங்கள் இயற்கை என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் மனித வாழ்க்கை மாறிக்கொண்டு வருகின்றது.

கோடிக்கணக்காக செலவு செய்து வின்வெளிக்கு சென்று ஆராய்ச்சி  செய்து சாதனை படைக்கின்றோம் .பூமிக்குள் புகுந்து புதையல் தேடுகின்றோம்.

நாம் படைக்கின்ற சாதனைகள்  எம்மோடு வரும் என்று கனவு காண்கின்றோம்.அத்தனையும் போலி என்பதை மறந்து விட்டோம் .
சிந்தித்துப்பார்த்தால் கிடைப்பது அத்தனையும்  பூஜ்ஜியம்தான் 

Post a Comment

0 Comments