Ticker

6/recent/ticker-posts

களையெடுக்கும் கன்னிப்பெண்


சிலுசிலுவென்று வயலுக்குள்ள காத்து வீச
சலசலவென்று ஏரிக்குள்ள தண்ணியோட
மஞ்சவெயிலும் மனசுக்குள்ளே மகிழ்ச்சி தர
மாராப்பு சேலையோட மனச அள்ளி
மந்திரப் புன்னகையில் என்னக்கிள்ளி
மலையழகி மதிபோலக் கிளம்பி வாறா
மனச மயக்கியே மகிழ்ச்சி தாறா
கரிசல் காட்டு கன்னிப் பெண்ணே
களையெடுக்க வந்த சின்னப்பெண்ணே
களையெடுத்தே எம்மனசக் 
கலச்சித்தான் போட்டவளே
சிவப்பான இதழினிலே
செந்தேனைக் கொண்டவளே
சிலைபோல அழகினிலே  
சிற்றிதயம் கொன்றவளே
கண்ணாடி வளையலோ
கண்ணைப் பறிக்குதடி 
கருகுமணி மாலையோ
கழுத்துக்குப் பொருந்துதடி
சின்னக்கையாலே செம்பருத்தி
வேலை செய்ய சிவந்தே கண்டித்தான் 
நோக்காடு வந்திடுமோ 

Post a Comment

1 Comments

  1. கவிதை பிரசுரமானதையிட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete