Ticker

6/recent/ticker-posts

'தடிமன்' நோய்க்கு என்ன மருந்து?

எனக்கு வயது 32. எந்த விதமான போதை பாவனையும் கிடையாது. நான் கடந்த 5,6 மாதங்களாக தடிமன் நோயால் அவதிப்படுகிறேன். காலை வேலையில் தும்மல் அதிகம். மூக்கின் வலது துவாரம் அடைப்பாக இருக்கிறது. இருமலும் வருது இளைப்பும் ஏற்படும். இதற்கு மருந்து பாவிக்கும் முறை எப்படி? ஆலோசனை தருவீர்களா?
நாம் அனைவரும் எமது வாழ்க் கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தடிமன் நோயினால் பீடிக்கப்பட்டிருப்போம். தடிமன் என்பது சுவாசத் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும்.

சுவாசத்தொகுதி மூக்குத் துவாரத்தில் ஆரம்பித்து சுவாசப்பை வரை நீடிக்கின் றது. சுவாசத் தொகுதி வெளிச் சூழ லுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒரு உருவாகும். எனவே சூழலில் ஏற்படக் கூடிய எந்தவொரு மாற்றமும் அல்லது நாம் தொழில் செய்யக்கூடிய சூழலின் தன்மையைப் பொறுத்தும் சுவாசப்பை உட்பட பல உறுப்புக்கள் பாதிக்கப்ப டுகின்றன. உதாரணமாக ஒருவர் தூசி அதிகமுள்ள சூழலில் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் அவரது சுவாசத்தொகுதி பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். ஆனால் இவ்வகையான சூழலில் இருந்து எமது உடம்பைப் பாதுகாப்பதற்காக வேண்டி சில விஷேட ஏற்பாடுகளும் எமது உடம்பில் உள்ளன. மூக்கின் உட்பகுதி எப்போதும் ஈரலிப்புத் தன்மையுடை யதாக இருப்பதால் தூசி, கிருமிகள் உட்செல்லும் போது அது உடம்பினுள் செல்லாமல் தடுப்பது இந்த ஈரலிப்புத் தண்மையும் மூக்கினுள் இருக்கக் கூடிய உரோமங்களும் ஆகும். இப் பாதுகாப்பு காரணிகள் பலவீனமடையும் போதே தடிமன் ஏற்படுகிறது. நாம் தடிமன் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இதில் பல வகைகள் உள்ளன. இதில் கிருமிகளினால் ஏற்படுகின்ற தடிமன், அலர்ஜியினால் ஏற்படுகின்ற தடிமன், காலநிலை மாற் றத்தினால் ஏற்படுகின்ற தடிமன் போன்ற வைகள் முக்கியமாகும்.

ஏறக்குறைய 200க்கு மேற்பட்ட தடி மனை ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் உள்ளன. அத்துடன் அலர்ஜியினால் ஏற்படக் கூடிய தடிமன் தூசி, சில உணவு வகைகள், செப்பனிடப்பட்ட உணவு களில் காணப்படக்கூடிய இரசாயனப் பொருட்கள், காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களினால் ஏற்படுகின்றன.

பொதுவாக பசும்பால் அனேகமான வர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பால் கொடுக்காமல் பசும் பாலினால் தயாரிக்கப்பட்ட பல வாணிபப் பெயர்களைக் கொண்ட மாவு வகைகளைக் கொடுப்பதே சிறுவர்களின் தொடர்ச்சியாக ஏற்படக் கூடிய தடிம் னுக்கு காரணமாகும். அத்துடன் அலர் ஜியினால் ஏற்படக் கூடிய தடிமனை மாத்திரைகளை மாத்திரம் உட்கொண்டு குணமாக்குவது சற்று கஷ்டமான விட யமாகும். இவர்கள் உணவு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இதற்கு மாறாக தாய்ப்பாலானது உடம்புக்குக் கிருமிகளினாலும் அலர்ஜி யினாலும் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தடுப்பதற்கான சக்தியைக் கொண்டுள் ளது. எனவே தடிமனுக்குச் சிகிச்சை செய்யும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியாது. நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்தே அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்நோயின் அறிகுறிகளாக தும்மல் மூக்கு அடைப்பு, கண் மற்றும் காது சொரிச்சல், தலைவலி, தொண்டை அரிப்பு, தொடர்ச்சியான வரண்ட இருமல், காய்ச்சல் போன்றவைகளில்
ஒன்றாக அல்லது அதற்கு மேற்பட்ட நோய் அறிகுறிகளோ காணப்படலாம். 

தடிமன் தொடர்ந்து சிகிச்சையின்றி நீடித்தால் அல்லது மீண்டும் மீண்டும் பீடித்தால் அது நுரையீரல், காது, கண், நுரையீரல் போன்ற உறுப்புக்களைத் தாக்கலாம். அதிலும் இதன் தாக்கம் சிறு வர்களிடையே கூடுதலாகக் காணப்படு கின்றது.

எனவே தடிமன் ஏற்பட்டால் அதற்கு ரிய பரிகாரத்தை வைத்தியர்களது ஆலோ சனைப்படி மேற்கொள்ள வேண்டும். அனேகமானவர்கள் வைத்தியர்களது ஆலோசனையைப் பெறாமல் Amoxyciuin போன்ற என்டிபயோடிக் மாத்திரை களைப் பாமசிகளில் வாங்கிப் பாவிக்கி றார்கள். இவ்வாறான என்டிபயோடிக் கள் உடம்பில் பல தாக்கங்களை ஏற்படுத்தி காலப்போக்கில் இம்மாத்திரைகள் நோய்க்கிருமிகளுக்கு இசைவாக்கம் டையும். எனவே காலப்போக்கில் வேறு ஏதாவது பாரிய தொற்று நோய்கள் ஏற்பட்டாலும் இந்நோய்களுக்கு என்டி பயோடிக் மாத்திரைகள் தொழிற்படாத நிலை ஏற்படும்.

எனவே தடிமன் வராமல் தடுக்கவும், தடிமனிலிருந்து நிவாரணம் பெறவும் நான் மேற்குறிப்பிட்டுள்ள விடயங் களைக் கருத்திற் கொண்டு செயற்பட் டால் மாத்திரைகள் இல்லாமலேயே நிவாரணம் கிடைக்கலாம்.

நவீன வைத்தியத்துறையில் பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனாலும் இம்மாத்திரைக்குப் பல பக்க விளைவுகள் இருப்பதன் காரணத்தினால் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பதே மேல். இதன் காரணமாகத்தான் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்றமடைந்த நாடுகளில் கூட ஆரம்பக்கட்ட சிகிச்சையாக கொதி நீர் ஆவி பிடிப்பதும், இஞ்சியினால் தயா ரித்த குடிநீர் (Ginger tea) அருந்துவது, விட்டமின் - C உட்கொள்வது போன்ற வைகளைத் தான் சிபார்சு செய்கிறார்கள். தேயிலைத் தூளை நீருடன் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பதன் மூலம் சிறந்த பயனைப் பெறலாம்.

அத்துடன் கரட், வெள்ளைப்பூடு, வெங் காயம் போன்றவைகளை அதிகமாக உட்கொள்ளும்படியும் மருத்துவ நூல்கள் சிபாரிசு செய்கின்றன.

யுனானி மருத்துவத்துறையில் நாட் டப்பட்ட தடிமனுக்குப் பல சிகிச்சை முறைகள் உள்ளன. நாட்பட்ட தடிமனைப் பொதுவாக பீனிசம் எனவும் அழைப் பார்கள். இங்கு கேள்வி கேட்டிருப்ப வருக்கும் பீனிச நோய் இருப்பதாகக் கருதுகின்றேன். 
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது எமது இளஞ் சிறார்களுக்கு தடிமன் நோய் பீடிக்காமல் இருக்க வேண்டுமாயின் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள "உங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் வரை தாய்ப்பால் கொடுக்கவும்" என்ற வாக்கியத்தை செயலில் எடுத்து குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதோடு, இரசாயணம் பொருட்களடங்கிய உணவுப் பொருட்களைக் கொடுப்பதிலிருந்து முற்றாகத் தவிர்ந்திருக்கும்படி வேண்டுகிறேன்.
DR.NASEEM

Post a Comment

0 Comments