Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிங்கப்பூரில் காசாவுக்காக புனித ரமலானில் நிதி திரட்டும் முயற்சி


மார்சிலிங் யூ டீ குழுத்தொகுதி சமூகத்தினர் காஸாவுக்காக நான்காம் முறையாய் நிதித்திரட்டத் தொடங்கியுள்ளனர்.

காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு அந்தப் பணம் கைகொடுக்கும்.

அந்த நோக்கத்திற்காக மார்சிலிங் யூ டீ குடியிருப்பாளர்கள் இதுவரை 700,000 வெள்ளி நிதியைத் திரட்டியுள்ளனர்.

உள்ளூர் அறநிறுவனமான ரஹ்மத்தன் லில் அலமின் (Rahmatan Lil Alamin) அறக்கட்டளையுடன் இணைந்து "Marsiling-Yew Tee GIVES" என்றழைக்கப்படும் நிதித் திரட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வட்டார சமூக மன்றங்களில் அல்லது பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் குடியிருப்பாளர்கள் நன்கொடைகளை வழங்கலாம்.

புனித ரமதான் மாதத்தில் மக்கள் நன்கொடையை வழங்கமுடியும்.

உணவு, மருத்துவப் பொருள்கள் போன்ற முக்கிய உதவிப் பொருள்களைக் காஸாவுக்கு அனுப்ப அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

nambikkai

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments