பானகமுவ மன்னின் வளம்
அந்நூரின் மாணவச் செல்வம்
நம் நாடெங்கும உலகெங்கும்
மணம் பரப்பும் தருணம்!
பட்டதாரி ஆசிரியர் ஆவதே
சவாலாய்க் கருதும் காலத்தில்
நீங்களோ களனிப் பல்கலைக்
கழகத்தில்வர்த்தக நிதித்துறையில்
பேராசிரியர் இருந்திருந்தால்
நுகரும் அதே ஆனந்தத்தை
அவள் தோழி நுகர்கிறேன்!
உள் மூச்சாய் சுவாசிக்கிறேன்!
இடர்கள் பல தாண்டி
கடல்கள் பல கடந்து
துன்பங்கள் பல துவன்று
துயரங்கள் பல தீர்த்து
அயராத முயற்சியின் வெளிப்பாடு
அருளாளன் அன்பாளனின் செயற்பாடு
தேசங்கள் பல கடந்து
பார் போற்ற வாழ
பட்டங்கள் பல பெற்று
படித்தரங்கள் பல ஏறி
வெற்றிகள் பல பெற்று
கல்வியில் உச்சம் தொட்டீர்கள்!
இனிய இளம் பேராசிரியர்
ராஸி ஜலால்தீன் அவர்களே
ஊரின் உறவுகளின் நாட்டின்
வாழ்த்துப் பாமாலை உங்களுக்கு!
இலங்கை முழுவதும் - ஏன்
இலங்கையையும் தாண்டி
இலங்கட்டும் தங்கள் சேவை!
இன்னும் பல பேராசிரியர்கள்
இம்மண்ணில் உருவாகட்டும்
இனிதே உங்களைப் பார்த்து!!
இளம் பேராசிரியருக்கு - எந்தன்
இதயம் கனிந்த வாழ்த்துகள்!!
இறையருளால் வாழ்க வளமுடன்!
எழுதியவர்;
கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
அதிபர் -SLPS -II
மே.மா/மினு/எல்லலமுல்ல
ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயம்
பஸ்யால.


0 Comments